• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் ‘கங்குவா’ என அறிவிக்கப்படுள்ளது

by Tamil2daynews
April 17, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் ‘கங்குவா’ என அறிவிக்கப்படுள்ளது

 

இந்திய சினிமாவில் 2023-24-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இயக்குநர் சிவா எழுத்து இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து இருக்கக்கூடிய ‘சூர்யா 42’ திரைப்படம் உள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இந்தப் படம் குறித்தான அறிவிப்பு, மோஷன் போஸ்டர் வீடியோ என இவை அனைத்தும் படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்தது. ரசிகர்கள் ஒவ்வொருவரும் படத்தின் டைட்டில் என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்.
தற்போது, தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் ‘சூர்யா 42’ படத்தின் தலைப்பை ‘கங்குவா’ என அறிவித்துள்ளது. நெருப்பின் சக்தி மற்றும் வலிமையுள்ள வீரன் என்பது இதன் பொருள். இந்தப் படம் பத்து மொழிகளில் 3டி-யில் உருவாவதால் அனைத்து வகையான பார்வையாளர்களையும் கனெக்ட் செய்யும் வகையிலான தலைப்பு என்பது முக்கியமானது. இதன் பொருட்டே, ‘கங்குவா’ என்ற தலைப்பு அனைத்து மொழிகளுக்குமாக இறுதி செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.Kanguva - Title Announcement | Suriya | Siva | Devi Sri Prasad | Studio Green | UV Creations - YouTubeஇந்தப் படத்தினை ஸ்டுடியோ கிரீன்  K.E. ஞானவேல் ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி புரோமோத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
இயக்குநர் சிவா மற்றும் அணியினர் இந்தப் படத்தை எழுதி இயக்குகின்றனர். இந்தப் படத்திற்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். ’ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை மிலன் கையாள, படத்தொகுப்பை நிஷாத் யூசுப் கவனிக்கிறார். படத்திற்கு சண்டைப் பயிற்சி சுப்ரீம் சுந்தர், வசனங்களை மதன் கார்க்கி எழுதி இருக்கிறார். கதை சிவா மற்றும் ஆதி நாராயணா. பாடல் வரிகளை விவேகா மற்றும் மதன் கார்க்கி எழுதி இருக்க ஆடை வடிவமைப்பை அனுவர்தனும் ஆடைகளை ராஜனும் கவனிக்கின்றனர். ஒப்பனை குப்புசாமி, நடனம் ஷோபி மற்றும் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் பணிபுரிகின்றனர்.

இந்தப் படம் கோவா, சென்னை மற்றும் பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் மீதமிருக்கும் படப்பிடிப்பும் வரும் மாதங்களில் முடிந்துவிடும். வலிமை மிக்க கதாநாயகனின் பல்வேறு அவதாரங்களை இந்த ஆக்‌ஷன் எண்டர்டெயினர் திரைப்படம் 3டியில் காட்ட இருக்கிறது. இது அனைத்துவிதமான பார்வையாளர்களையும் கனெக்ட் செய்யும் வகையில் அமையும்.
படத்தில் பல ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. விஎஃப்எக்ஸ் மற்றும் சிஜிஐ காட்சிகள் உயர்தரமாக இருக்க வேண்டும் என்பதால் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதனால், திரைப்படம் 2024-ம் வருடத்தின் ஆரம்பத்தில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாகும் தேதி, படப்பிடிப்பு முடிந்ததும் அறிவிக்கப்படும். தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் பல்வேறு ஊடகங்கள், தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், வால் போஸ்டர்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஒரே நேரத்தில் தங்களுடைய படத்தின் தலைப்பை இன்று அறிவித்தனர்.

படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் சிவா தெரிவிக்கையில், ‘’சூர்யா 42’ படத்தின் தலைப்பை ’கங்குவா’ என அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். திரையில் நெருப்பின் வீரமும் வலிமையும் கொண்ட ஒரு கதாநாயகனாக நடிகர் சூர்யா இருப்பார். கம்பீரமான, தனித்துவமான அதே சமயம் சுவாரஸ்யம் தரக்கூடிய ஒரு கதையாக இது பார்வையாளர்களுக்கு அமையும். படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் பட வெளியீட்டுத் தேதியையும் அறிவிப்போம்” என்றார்.

Previous Post

‘தெய்வ மச்சான்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு

Next Post

பொன்னியின் செல்வன் கீதம் உருவாக்கியதில் எந்த பின்னணியும் இல்லை.. மணி ரத்னம் சார் விரும்பியதால் உருவானது – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

Next Post

பொன்னியின் செல்வன் கீதம் உருவாக்கியதில் எந்த பின்னணியும் இல்லை.. மணி ரத்னம் சார் விரும்பியதால் உருவானது - இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

Popular News

  • இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; ‘3.6.9’ அனுபவங்களும் அடுத்தக் கட்ட பிரம்மாண்டமும்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.