• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ருத்ரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் பயனுள்ள முறையில் கொண்டாடிய தயாரிப்பாளர்-இயக்குநர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மற்றும் படக்குழுவினர்

by Tamil2daynews
April 19, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ருத்ரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் பயனுள்ள முறையில் கொண்டாடிய தயாரிப்பாளர்-இயக்குநர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மற்றும் படக்குழுவினர்

 

முன்னணி தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி பேனரில் தயாரித்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ருத்ரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் அமோக ஆதரவுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக தமிழகம் எங்கும் முத்திரை பதித்து வருகிறது.
இந்த வெற்றியை பயனுள்ள வகையில் கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர்-இயக்குநர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், கதாசிரியர் திருமாறன் மற்றும் நடிகர் இளவரசு ஆகியோர் சென்னையில் உள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ளவர்களுடன் உரையாடி உணவும், நன்கொடையும், அத்தியாவசிய பொருட்களும் அளித்து மகிழ்ந்தனர்.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன், “ருத்ரன் திரைப்படத்திற்கு தங்களது மேலான ஆதரவை அளித்த ரசிகப்பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் மையக்கருவே வயது முதிர்ந்த பெற்றோர்களை அவர்களது பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் விட்டு விடாமல் நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்பது தான்.  எனவே பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுடன் திரைப்பட வெற்றியை கொண்டாடியது மிகுந்த மனநிறைவு அளிக்கிறது,” என்றார்.
‘காஞ்சனா’ வெற்றிக்குப் பின்னர் 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் இணைந்து ‘ருத்ரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் தவிர, பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளதுனர்.
ஆக்‌ஷன் கலந்த பொழுதுபோக்கு கதையான‌ ‘ருத்ரன்’ திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பையும், ராஜு கலை இயக்கத்தையும், சிவா-விக்கி சண்டைக்காட்சிகளையும் கையாண்டுள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதையை கே.பி.திருமாறன் எழுதியுள்ளார். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
Previous Post

4 ஆண்டுகள் கடந்து விட்டன திரு. விவேக் அவர்களுடன் பணிபுரிந்த தருணங்கள் விலை மதிப்பற்றவை,- நடிகர் தேவ்

Next Post

ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

Next Post

ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

Popular News

  • ‘குப்பி’ திரைப்படத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்: மீண்டும் இணையும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணி!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டிமான்ட்டி காலனி 2’ படப்பிடிப்பு நிறைவு

    0 shares
    Share 0 Tweet 0
  • ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா? ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.