• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3’ தமிழ் நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

by Tamil2daynews
April 25, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3’ தமிழ் நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

 

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸியின் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதி கிட்டத்தட்ட வந்துவிட்டது. படம் இறுதியாக மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்குள் ரசிகர்களும் உலக அளவில் உள்ள விமர்சகர்களும் படம் குறித்தான தங்களது எதிர்பார்ப்பை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3’ படம் இந்தியாவிலிருந்து அபரிமிதமான அன்பையும் உற்சாகத்தையும் பெற்றுள்ள நிலையில், தமிழ் நடிகர்களை மார்வெல் ஸ்டுடியோஸ் இந்தத் திரைப்படத்தில் மீண்டும் நடிக்க வைத்தால் யார் எந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
1. ஸ்டார்-லார்டாக நடிகர் சூர்யா:
சூர்யாவைத் தவிர வேறு யாரையும் ஸ்டார்-லார்டாக நடிக்க வைக்க நினைக்க முடியாது. அவர் இதற்கு முன்பு ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்தது மட்டும் இல்லை, அவரது தோற்றத்தின் ஈர்ப்பு, திறமை மற்றும் திரையின் இருப்பு ஆகியவையும் இதுபோன்ற ஒரு கதாபாத்திரம் அவர் நடிக்க சரியாக இருக்கும்.
2. கமோராவாக நயன்தாரா:
கமோரா மற்றும் அவரது கொலையாளி உள்ளுணர்வை யார்தான் விரும்ப மாட்டார்கள்? அவரது பெண்மை மற்றும் சக்தி வாய்ந்த தோற்றம், பெண்கள் அதிரடியான கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என்பதற்கும் அதே சமயம் சிறந்தவர்களாகவும் இருக்க முடியும் என்பதற்கு உதாரணம். ஜவானில் லேடி சூப்பர் ஸ்டாரின் அதிரடி அவதாரம் நிச்சயமாக அவரது வசீகரமான ஆளுமையுடன் அவரது உடல் வலிமையை வெளிப்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கப் போகிறது.
3. நெபுலாவாக கீர்த்தி சுரேஷ்:
ஒரு வில்லனிலிருந்து உண்மையான ஹீரோவாக நெபுலா  உருவாகிறது மற்றும் உண்மையில் இவள் ஒரு தடகளப் பெண், ஒரு சிறந்த ஆயுதம் மற்றும் நிராயுதபாணியான போராளி. உடற்பேணுதலில் ஆர்வம் மிக்கவர் மற்றும் பல ரசிகர்களின் இதயங்களில் தனது முத்திரையை பதித்த கீர்த்தி நிச்சயமாக நெபுலாவாக நடிப்பதற்கு பொருத்தமானவர்.
4. விஜய் சேதுபதி குரூட் (Voice):
இதில் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரம் க்ரூட் மற்றும் அவரது பரிணாமம் அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். வின் டீசல் இதற்கு குரல் கொடுத்திருப்பார். அவர் பேசும் மூன்று வார்த்தைகள் ‘நான் க்ரூட்’ (‘I am Groot’). விஜய் சேதுபதியின் பன்முகத்தன்மை அவரை கோலிவுட்டில் அதிகம் தேடப்படும் நடிகர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.
5. ராக்கெட் ரக்கூனாக விக்ரம் (Voice):
கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸியின் ஆயுதம் மற்றும் தந்திர நிபுணராக, ராக்கெட் எப்பொழுதும் பிரபஞ்சத்தை காப்பாற்ற தன்னால் இயன்றவரை முயற்சிக்கிறது. ராக்கெட் படத்தில் மிகவும் வேடிக்கையான கதாபாத்திரம். இந்த சிறியவனுக்கு குரல் கொடுப்பதற்கு ’பொன்னியன் செல்வன் 2’ நடிகர் தான் மிகவும் பொருத்தமாக இருப்பார்.
6. டிராக்ஸாக ஆர் மாதவன்:
கார்டியன்ஸ் மற்றும் அவரது நுட்பமான ஒன்-லைனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எவரையும் Drax The Destroyer கொல்ல விரும்புகிறது. இதன் தன்மை எப்போதும்  தீவிரமான காட்சிகளை உற்சாகப்படுத்தும் விதமாக அமைகிறது. ஆர் மாதவனின் வலுவான உடலும் அவரது சால்ட் அண்ட் பெப்பர் தோற்றமும் நிச்சயம் இதற்கு பொருந்திப் போகும். ‘விக்ரம் வேதா’ ஹங்க் நடிகர் நிச்சயமாக ஒரு நல்ல டிராக்ஸை உருவாக்குவார்.
7. த்ரிஷா மான்டிஸாக:
கார்டியன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் அக்கறையுள்ள மற்றும் அன்பான ஒரு நபர் மான்டிஸ். இவள் ஒரு சூப்பர் ஹீரோயின் மற்றும் மக்களின் உணர்வுகளை உணரக்கூடிய திறனும் மாண்டிஸின் சக்தி. த்ரிஷா எப்போதுமே பக்கத்து வீட்டுப் பெண் மற்றும் வசீகரமான ஆளுமையைக் கொண்டிருப்பார். இது முற்றிலும் மான்டிஸின் ஆளுமையை ஒத்திருக்கிறது.
மார்வெல் ஸ்டுடியோஸின் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3, ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் மே 5, 2023 அன்று இந்தியாவில்  திரையரங்குகளில் வெளியாகிறது.
Previous Post

ஜாகுவார் தங்கம் வெளியிட்ட ‘உருச்சிதை’ டிரைலர்..!

Next Post

செம்பனை உடையில் பொறித்த கார்த்தி !!

Next Post

செம்பனை உடையில் பொறித்த கார்த்தி !!

Popular News

  • இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; ‘3.6.9’ அனுபவங்களும் அடுத்தக் கட்ட பிரம்மாண்டமும்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.