• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு

by Tamil2daynews
May 11, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு

 

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ குஷி’  படத்தில் இடம்பெற்ற ‘என் ரோஜா நீயா..’ என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘குஷி’ திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் முதல் பாடலுக்கு ‘என் ரோஜா நீயா..’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

‘என் ரோஜா நீயா ..’ எனும் பாடலின் மெட்டிற்கும், பாடல் வரிகளுக்கும் விஜய் மற்றும் சமந்தா திரையில் தோன்றி காதல் உணர்வை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதிய பாடல் வரிகளில் கதையின் நாயகனான விஜய், காதல் மீது கொண்ட பேரார்வத்தின் காரணமாக காதலை விவரிக்கிறார். காஷ்மீரின் பசுமையான நிலவியல் பின்னணியுடன் தொடங்கும் இந்த பாடலுக்கான காணொளியில் நடிகர் விஜய் பொருத்தமான காதலராகவும், சமந்தா அவருக்கு ஏற்ற அழகிய காதலியாகவும் தோன்றுகிறார்கள்.Imageஹேஷாமின் இசையமைப்பும், அவரது சொந்தக் குரலும் பாடலின் ஜீவனுடன் ஒன்றிணைந்திருக்கின்றன. அவர் இனிமையான மற்றும் புதுமையான பாடலை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடல் தரமான இசையை கேட்பவருக்கு நிச்சயம் பிடிக்கும்.

இயக்குநர் சிவா நிர்வாணா மணிரத்னத்தின் ரசிகர் என்பதால், இந்த பாடலில் இடம்பெற்ற சில காட்சிகள், மணிரத்னம் படத்தின் அதிர்வை பிரதிபலிக்கின்றன. இந்தப் பாடலுக்கு சிவா நிர்வாணா நடனமும் அமைத்திருக்கிறார்.

‘குஷி’ திரைப்படம் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்திருக்கும் காதல் கதை. இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் பாடலை  முதல் பாடலாக வெளியிட்டு, ரசிகர்களிடத்தில் கவனத்தை கவர்ந்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிதி பங்களிப்புடன் சிவா நிர்வாணா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, ரோகிணி, வெண்ணலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹேப் இசையமைத்திருக்கிறார்.

முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளான இன்று அவரது நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாக இருக்கும் ‘குஷி’ படத்திலிருந்து முதல் பாடல் வெளியிடப்பட்டிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

Previous Post

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும், ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன் 2, 2023 அன்று வெளியாகிறது

Next Post

பிரபல நடன இயக்குநர் ஷெரீஃப்பின் புதிய முன்னெடுப்பான ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்

Next Post

பிரபல நடன இயக்குநர் ஷெரீஃப்பின் புதிய முன்னெடுப்பான ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்

Popular News

  • ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி

    0 shares
    Share 0 Tweet 0
  • சாந்தனு பாக்யராஜ் – சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.