• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் நிகில் நடிக்கும் ‘ஸ்பை’ பட டீசர் வெளியீடு

by Tamil2daynews
May 16, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் நிகில் நடிக்கும் ‘ஸ்பை’ பட டீசர்  வெளியீடு

 

நடிகர் நிகில் -இயக்குநர் கேரி பி ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாரான ‘ஸ்பை’ எனும் திரில்லர் திரைப்படத்தின் டீசர். புது தில்லி கர்தவ்யா பாதையில் அமைந்திருக்கும் சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே  திட்டமிட்டப்படி மே 15ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

நட்சத்திர நடிகர் நிகில் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் பான் இந்திய திரைப்படம் ‘ஸ்பை’. மறைக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த ரகசியங்களை அடிப்படையாகக் கொண்டு, இதன் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘நீங்கள் எனக்கு ரத்தத்தை கொடுங்கள். நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்’ என வீரர் சுபாஷ் சந்திர போஸின் வீர முழக்கத்தை… இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அண்மையில் வெளியிட்ட காணொளியில் இடம்பெற்று பெரும் கவனத்தை கவர்ந்தது.
டெல்லியில் உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஒன்று நடைபெற்றது. மே 15 ஆம் தேதியான இன்று கர்தவ்யா பாதையில் ‘ஸ்பை’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த பாதையில் நடைபெறும் முதல் திரைப்பட டீஸர் வெளியிட்டு விழா இது என்பதால் அனைவரது  கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதனை ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும் திரையில் யாரும் எதிர்பாராத ஒரு பிரம்மாண்ட படைப்பு வரவிருக்கிறது என்பதையும் தெரியப்படுத்துங்கள்.‌

பிரபல படத் தொகுப்பாளரான கேரி பி ஹெச்- இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தை Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் எனும் நிறுவனம் சார்பில் கே. ராஜசேகர் ரெட்டி பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இந்நிறுவனத்தில் சரந்தேஜ் உப்பலபதி தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இந்த திரைப்படத்தில் நட்சத்திர நாயகன் நிகிலுக்கு முதன்மையான ஜோடியாக ஐஸ்வர்யா மேனனும், இரண்டாவது நாயகியாக சானியா தாக்கூரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஆரியன் ராஜேஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் அபிநவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு செங் குப்தா, நித்தின் மேத்தா, ரவி வர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங்,, சோனியா நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வம்சி பட்சிபுளுசு மற்றும் மார்க் டேவிட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ சரண் பக்கலா மற்றும் விஷால் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

ஆக்ஷன் கலந்த ஸ்பை த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர் கே ராஜசேகர் ரெட்டி எழுதி இருக்கிறார். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து இந்திய மொழிகளில், எதிர்வரும் ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

Previous Post

அமேசான் அசல் படைப்பான ‘மாடர்ன் லவ் சென்னை’ யிலிருந்து இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு

Next Post

கஷ்ட்டப்படும் தயாரிப்பாளர்களுக்கு ‘அரோமா ஸ்டுடியோ’ கைகொடுக்கும் – இயக்குநர் அருள் அறிவிப்பு

Next Post

கஷ்ட்டப்படும் தயாரிப்பாளர்களுக்கு ‘அரோமா ஸ்டுடியோ’ கைகொடுக்கும் - இயக்குநர் அருள் அறிவிப்பு

Popular News

  • சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.