• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மஞ்சு வாரியர் & சைஜு ஶ்ரீதரன் இணையும் ஃபுட்டேஜ் படம் திரிச்சூரில் கோலாகலமாக துவங்கியது !!

by Tamil2daynews
May 23, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மஞ்சு வாரியர் & சைஜு ஶ்ரீதரன் இணையும் ஃபுட்டேஜ் படம் திரிச்சூரில் கோலாகலமாக துவங்கியது !!

 

திருச்சூர் நகரின்  மையப்பகுதியான சிம்னி அணைக்கு அருகில், பிரபல எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு புதிரான புதிய படமான “ஃபுட்டேஜ்’ படத்தினை புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர், ஸ்விட்ச்-ஆன் செய்து துவக்கி வைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு,  முதல் ஷாட்டுடன் மிக  இனிமையான நிகழ்வாக துவங்கியது.
“அஞ்சம் பாதிரா”, “கும்பளங்கி நைட்ஸ்,” மற்றும் “மஹேஷின்டே பிரதிகாரம்” போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் எடிட்டிங்கில் மூளையாக செயல்பட்டவர் சைஜு ஸ்ரீதரன். மிகப்பிரபலமான எடிட்டர் எனும் நிலையிலிருந்து, தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார்.
இந்தியத் திரையுலகின் மிகப்பிரபலமான  ஆளுமையாக விளங்கும்  நடிகை மஞ்சு வாரியர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார் இவருடன்  விசாக் நாயர் மற்றும் காயத்ரி அசோக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும்  இணைந்து நடிக்கின்றனர். மூவி பக்கெட், காஸ்ட் அண்ட் கோ மற்றும் பேல் ப்ளூ டாட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில், பினீஷ் சந்திரன் மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். ராகுல் ராஜீவ் மற்றும் சூரஜ் மேனன் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.  அனீஷ் C சலீம் லைன் புரொடியூசராக பணியாற்றுகிறார்.
ஷப்னா முஹம்மது மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து,  கூட்டு முயற்சியாக  “ஃபுட்டேஜ்” படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவாளராக  ஷினோஸ் பணியாற்ற, கலை இயக்குநராக அப்புண்ணி சாஜன் பணியாற்றுகின்றனர். மைண்ட்ஸ்டின் ஸ்டுடியோஸ் VFX  பணிகளை கவனிக்க, சமீரா சனீஷால் உடை வடிவமைப்பு பணிகளையும், ஒலி வடிவமைப்பை நிக்சன் ஜார்ஜ்  அவர்களும் செய்கின்றனர்.
இந்த திரைப்படம் ஃபவுண்ட் புட்டேஜை பயன்படுத்தி எடுக்கப்படுகிறது. திரைக்கதை மற்றும் இயக்கத்தில் இந்த  முயற்சியானது, திரைப்படத்துறையில்  ஒரு தனித்துவமான மைல்கல்லாக இருக்கும்.  இந்த திட்டத்தினை சந்தீப் நாராயண் வடிவமைக்கிறார். அஸ்வெகீப்சர்ச்சிங் பாடல்களை வழங்க, சுஷின் ஷியாம் பின்னணி இசையை வடிவமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் அறிமுகமே ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்ததை அடுத்து, படம் தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், படத்தில் இன்னும் என்னென்ன ஆச்சர்யங்கள் இருக்குமோ என திரை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க துவங்கிவிட்டனர். மஞ்சு வாரியரின் திரை ஆளுமை,  சைஜு ஶ்ரீதரனின் அறிமுக இயக்கம் என இப்படம் கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.
Previous Post

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும், ‘கூழாங்கல்’ புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், சூரி-அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

Next Post

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் பான் இந்தியப் பிரமாண்ட படைப்பு “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகர்கள் வெங்கடேஷ், ஜான் ஆபிரகாம், சிவ ராஜ்குமார், கார்த்தி, துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்து வெளியிட உள்ளனர் !!!

Next Post

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் பான் இந்தியப் பிரமாண்ட படைப்பு “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகர்கள் வெங்கடேஷ், ஜான் ஆபிரகாம், சிவ ராஜ்குமார், கார்த்தி, துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்து வெளியிட உள்ளனர் !!!

Popular News

  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ – பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

November 4, 2026

ட்ரூ ஸ்டோரீஸ் தயாரிப்பில் ஷேன் நிகமின் அடுத்த திரைப்படம் ஏற்காட்டில் பூஜையுடன் தொடக்கம்!

November 4, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸர் மூலமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்தது படத்தயாரிப்பு நிறுவனம்!

November 4, 2026

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

November 4, 2026

‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

November 4, 2026

‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

November 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.