• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசை ஹங்கேரியில் உருவானது!

by Tamil2daynews
December 22, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசை ஹங்கேரியில் உருவானது!

 

தமிழ்த் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, நம்பிக்கைக்குரிய பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கள்வன்’ திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் தயாராகி வருகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், படத்தின் பின்னணி இசையை இசையமைப்பாளர் ரேவா ஹங்கேரியில் நம்பிக்கைக்குரிய இசைக்கலைஞர்கள் குழுவுடன் உருவாக்கியுள்ளார்.

இது குறித்து இசையமைப்பாளர் ரேவா கூறும்போது,
“அற்புதமான பல திறமைசாலிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் டில்லி பாபு சார், பிவி ஷங்கர் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோருக்கு நன்றி. ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா சார், இவானா மற்றும் பலர் நடித்துள்ள ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசையமைப்பது மிகவும் சவாலானது. இந்தப் படத்தின் கதை மூலம் இசையில் பல ஆக்கப்பூர்வமான விஷயங்களைக் கற்றுக் கொள்ள எங்களுக்கு வாய்ப்பு வழங்கியது. உணர்வுகள் இந்தப் படத்தின் மையமாக இருப்பதால், அதற்கான இசையைக் கொடுத்துள்ளோம். எனது பின்னணி இசைக்கு ரசிகர்கள் எந்த மாதிரியான ரெஸ்பான்ஸ் கொடுக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்” என்றார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ‘கள்வன்’ படத்தின் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தை முன்னணி ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கியுள்ளார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி டில்லி பாபு தயாரித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. வர இருக்கும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே, இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா இருவரும் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் இன்னும் சில நடிகர்கள் நட்சத்திரக் குழுவில் ஒரு பகுதியாக உள்ளனர்.

தொழில்நுட்ப குழு:

தயாரிப்பாளர் – ஜி.டில்லி பாபு
தயாரிப்பு இல்லம் – ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி
ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் – பிவி ஷங்கர்
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
எடிட்டிங் – சான் லோகேஷ்
கலை – என்.கே. ராகுல்
ஸ்டண்ட் – திலிப் சுப்பராயன்
கதை – ரமேஷ் ஐயப்பன் | பிவி சங்கர்
திரைக்கதை – பிவி ஷங்கர் | ரமேஷ் ஐயப்பன்
வசனங்கள் – ரமேஷ் ஐயப்பன் | ராஜேஷ் கண்ணா | பிவி சங்கர்
கூடுதல் திரைக்கதை – SJ அர்ஜுன் | சிவகுமார் முருகேசன்
நிர்வாக தயாரிப்பாளர் – பூரணேஷ்
தயாரிப்பு நிர்வாகி – எஸ்.எஸ்.ஸ்ரீதர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – கே.வி. துரை
பாடல் வரிகள் – சிநேகன் | ஏகாதேசி | மாயா மகாலிங்கம் | நவக்கரை நவீன் பிரபஞ்சம்
ஆடை வடிவமைப்பாளர் – கிருஷ்ண பிரபு
ஸ்டில்ஸ் – இ.ராஜேந்திரன் காஸ்ட்யூமர் – சுபியர்
ஒப்பனை – வினோத் சுகுமாரன்
PRO – சுரேஷ் சந்திரா | ரேகா டி’ஒன்
விளம்பர வடிவமைப்பாளர் – வின்சி ராஜ்

Previous Post

நடிகர் மம்முட்டி நடித்த ‘பலுங்கு’ திரைப்படம் 17ஆவது வருடத்தை நிறைவு செய்கிறது!

Next Post

அன்னதானம் வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் வெற்றி!!

Next Post

அன்னதானம் வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் வெற்றி!!

Popular News

  • Zion Films மற்றும் MRP Entertainment தயாரிப்பில் பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. !!

    Zion Films மற்றும் MRP Entertainment தயாரிப்பில் பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது!

October 27, 2026

நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு

October 27, 2026

நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

October 27, 2026

‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!

October 27, 2026

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு

October 27, 2026

“விதிகளை மீறும் ருத்ரா கதாபாத்திரம் மிக சுவாரஸ்யமானது”- நடிகை ராதிகா ஆப்தே!

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.