• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

by Tamil2daynews
December 22, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

 

டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் வெளியான “உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா 20 ஆண்டுகளைக் கடந்து, 21 வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதுமிலிருந்து தரமான பல திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டு வருகின்றன. 1000க்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் இவ்விழாவைப் பார்வையிட்டு வருகின்றனர்.

இவ்விழாவில் தமிழிலிருந்து சிறந்த படப்போட்டித் தேர்வில் 12 அற்புதமான படைப்புகள் கலந்துகொண்டன. இவ்விழாவில் திரையிடப்பட்ட  “உடன்பால்” படம் ரசிகர்களிடம் பெரும் பாரட்டுக்களைக் குவித்தது.
படத்தின் திரையிடலில் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன், நடிகர் சார்லி, நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, KPY தீனா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோருடன், ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர்,  இசையமைப்பாளர் சக்தி பாலாஜி உட்படத் தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர்.

குடும்ப பின்னணியில் இன்றைய சமூகத்தில்  உறவுகள் பணத்திற்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை அற்புதமான திரைக்கதையில் சொல்லிய இந்தத் திரைப்படம் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிவிழாவில் உடன்பால் திரைப்படம் இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இவ்விருதைப் பெற்றுக்கொண்டனர்.
தயாரிப்பாளருக்கு 50000 காசோலையும், இயக்குனருக்கு 50000 காசோலையும், விருதுடன் வழங்கப்பட்டது.

‘உடன்பால்’  விருதைவென்ற போது ரசிகர்கள் பெரும் கரகோஷத்துடன் படக்குழுவினரைப் பாராட்டினர்.

விமர்சகர்கள், ரசிகர்கள்,  திரை ஆர்வலர்கள் என அனைவரது பாராட்டுக்களைக் குவித்த இப்படம், ஆஹா தமிழ் ஓடிடித் தளத்தில்  பார்க்கக் கிடைக்கிறது.

Previous Post

அன்னதானம் வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் வெற்றி!!

Next Post

“ஜோ” படத்தின் வெற்றியை தொடர்ந்து “VISION CINEMA HOUSE” டாக்டர் டி.அருளானந்து அவர்கள் தயாரிக்கும் “கோழிப்பண்ணை செல்லதுரை” திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி,பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.

Next Post

"ஜோ" படத்தின் வெற்றியை தொடர்ந்து "VISION CINEMA HOUSE" டாக்டர் டி.அருளானந்து அவர்கள் தயாரிக்கும் "கோழிப்பண்ணை செல்லதுரை" திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி,பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.