• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தில் இருந்து வெளியான ஏ.ஆர் ரஹ்மானின் ஆத்மார்த்தமான பாடல் ‘மெஹர்பான் ஓ ரஹ்மான்’, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது!

by Tamil2daynews
March 22, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தில் இருந்து வெளியான ஏ.ஆர் ரஹ்மானின் ஆத்மார்த்தமான பாடல் ‘மெஹர்பான் ஓ ரஹ்மான்’, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது!

 

சர்வைவல் அட்வென்ச்சர் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ திரைப்படம் உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்குகளில் மார்ச் 28, 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

கடந்த வார இறுதியில் கொச்சியில் படத்தின் இசை வெளியீடு நடந்ததைத் தொடர்ந்து, இந்த வாரம் அதன் இசை ஆல்பத்தை 5 மொழிகளில், அனைத்து ஸ்ட்ரீமிங் தளங்களிலும் படக்குழு வெளியிட்டுள்ளது. ரஹ்மானின் இசை இணையத்தை ஆட்கொண்டுள்ள நிலையில், படக்குழு சமீபத்தில் ‘மெஹர்பான் ஓ ரஹ்மான்’ இசை வீடியோவை வெளியிட்டது.

இந்த ஆத்மார்த்தமான மெல்லிசையான ‘மெஹர்பான் ஓ ரஹ்மான்’ என்பது அன்பு, நம்பிக்கை, கருணை மற்றும் தெய்வீகத்தன்மை ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஒரு பாடல். இதுதான் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் பிரதிபலித்துள்ளது. இந்தப் பாடலை இசையமைத்து, தயாரித்து, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஒருங்கிணைத்துள்ளார். பிரபல பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி பாடலை அழகாக எழுதியிருக்க, மிகவும் திறமையான ஜித்தின் ராஜ் பாடியுள்ளார்.

முடிவில்லாத பாலைவனத்தின் கண்கவர் காட்சிகளுடன், படத்தில் வரும் கதாபாத்திரங்களின் அழகு இவற்றை எல்லாம் கடந்து ஏ.ஆர். ரஹ்மான் ஒவ்வொரு கணத்தையும் தனது இசை மூலம் கடத்தியுள்ளார். இந்தப் பாடல் படத்தின் ஆன்மாவைத் தாங்கி வருகிறது மற்றும் அதன் சாராம்சத்தை ரஹ்மான் தனது இசையமைப்பிலும் சிக்க வைத்துள்ளார்.

படத்தின் இசை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், “பிளெஸ்ஸியின் கண்களில் இருந்த கனவு எனக்கு ‘ஆடுஜீவி’தத்தை இன்னும் ஸ்பெஷலாக மாற்றியது. சமரசம் செய்து கொள்ளாத இவரைப் போன்றவர்களால் சில சமயம் திரைப்படம் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அவர் திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட ஒரு தந்தையைப் போல செயல்பட்டார். உண்மையில், இது மிகப்பெரிய விஷயம். ‘ஆடுஜீவிதம்’ படத்தின் இந்தி வெர்ஷன் எழுதிய பிரசூன் ஜோஷிக்கு நன்றி சொல்கிறேன். ஏனெனில், அவர் படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் பிளெஸ்ஸி சார் மீது கொண்ட காதலால் இதற்கு சம்பளம் எதுவும் வாங்கவில்லை. இசையில் திருப்தி இல்லாததால் இந்தப் படத்திற்கு மூன்று முறை இசயமைத்தேன். கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இந்த இசை மெல்ல வளர்ந்தது. இப்போதிருக்கும் இசையை படக்குழுவினர் அனைவரும் விரும்பினார்கள். இந்தப் படம் நம் எல்லோருக்குமான கதை” என்றார்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரவிருக்கும் படத்தின் இசை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர். படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். இதன் தயாரிப்பு தரம், கதைசொல்லல் மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது. சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும்.

விஷுவல் ரொமான்ஸ் பற்றி:
விஷுவல் ரொமான்ஸ் என்பது கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். 7 ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில், இந்த நிறுவனம் சிறந்த படைப்புகளைக் கொடுத்து முக்கியமான தயாரிப்பு நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ‘100 இயர்ஸ் ஆஃப் க்ரிசோஸ்டம்’ என்ற 48 மணிநேரம் நீடித்த ஒரு ஆவணப்படத் தயாரிப்பின் மூலம் விஷுவல் ரொமான்ஸ் சினிமா உலகில் ஒரு மைல்கல்லை எட்டியது. இந்தப் படம் பரவலாகப் பாராட்டப்பட்டது மட்டுமல்லாது, கின்னஸ் புத்தகத்திலும் இது இடம்பெற்றுள்ளது. இது சினிமா மீது விஷுவல் ரொமான்ஸின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இயக்குநர் பிளெஸ்ஸி இந்தப் படத்தில் சிறப்பான கதையை சொல்லியுள்ளார். ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் ஆறு கேரள மாநில திரைப்பட விருதுகள் உட்பட, இந்திய சினிமாவின் தலைசிறந்த விருதுகளை பிளெஸ்ஸி பெற்றுள்ளார். பிளெஸ்ஸி ஐப் தாமஸின் திறமையான இயக்கத்தின் கீழ், விஷுவல் ரொமான்ஸ் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது. நிச்சயம் பார்வையாளர்களுக்கு புதுவிதமான சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்.

Previous Post

நடிகை கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாகிறது!

Next Post

படை தலைவனுக்கு பக்க பலமாகும் ராகவா லாரன்ஸ்

Next Post

படை தலைவனுக்கு பக்க பலமாகும் ராகவா லாரன்ஸ்

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • Actor Mohan Raman daughter  Actress Vidyullekha gets engaged to Mr.Sanjay Watwani

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.