• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம் மே மாதம் வெளியாகிறது!

by Tamil2daynews
May 15, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம் மே மாதம் வெளியாகிறது!

 

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் எழுத்தாளர்-இயக்குநர் குகன் சென்னியப்பன் கூறும்போது, ”இந்த மாதம் உலகம் முழுவதும் உள்ல திரையரங்குகளில் வெளியாக ’வெப்பன்’ திரைப்படம் தயாராகி வருகிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படத்தில் எல்லோருமே சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளோம். நிச்சயம் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்றும் நம்புகிறேன். சூப்பர் ஹ்யூமன் எலிமெண்ட்டை அடிப்படையாகக் கொண்டு சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லராக ‘வெப்பன்’ படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை பல திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான ஆக்‌ஷன் கதை இதில் இருக்கும். மில்லியன் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர்கள் எம்.எஸ்.மன்சூர், எம்.எஸ்.அப்துல் காதர் மற்றும் எம்.எஸ்.அஜீஷ் ஆகியோரின் ஆதரவு இல்லாமல் இந்தப் படம் சாத்தியமில்லை” என்றார்.

மேலும், ”அவர்கள் எனக்கு முழுமையான படைப்பாற்றல் சுதந்திரம் கொடுத்தனர். நாயகனாக நடிகர் சத்யராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதன்முறையாக, அவர் சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் எனக்கும் ஊக்கம் கொடுத்தது. நடிகர் வசந்த் ரவியின் ஸ்கிரீன் பிரசன்ஸ் நிச்சயம் கவனம் ஈர்க்கும். படத்தில் நீங்கள் எதிர்பார்காத நிறைய திருப்பங்கள் இருக்கும். ராஜீவ் மேனன் சார் இந்த படத்தில் ஸ்டைலான அதேசமயம் பவர்ஃபுல்லான வில்லனாக நடித்துள்ளார். தன்யா ஹோப்பின் நடிப்பு நிச்சயம் பாராட்டப்படும். இந்தப் படத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு எனது பணிவான நன்றிகள். இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகும் ‘வெப்பன்’ படத்தை பார்வையாளர்கள் எப்படி கொண்டாட இருக்கிறார்கள் என்பதை நேரில் பார்க்க ஆர்வமாக உள்ளேன்”.

மில்லியன் ஸ்டுடியோ தயாரித்திருக்கும் இந்தப் படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இவர்களோடு யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன்,வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் மற்றும் பலர் உள்ளனர். ஜிப்ரான் இசையத்திருக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு கோபி கிருஷ்ணா எடிட்டிங், கலை சுபேந்தர் பி.எல், ஆக்‌ஷன் சுதீஷ்.

தொழில்நுட்பக் குழு:
ஆடை வடிவமைப்பாளர்கள்: லேகா மோகன்,
ஒலி கலவை: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்,
ஒலி வடிவமைப்பு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்,
வண்ணம்: ஸ்ரீ
டிஐ லேப்: புரோமோவொர்க்ஸ்,
விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர்: கோகுல்,
ஒப்பனை: மோகன்
ஸ்டில்ஸ்: விஜய்
விளம்பர வடிவமைப்பு: தினேஷ் அசோக்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: காந்தன்,
நிர்வாக தயாரிப்பாளர்: ரிஸ்வான்.ஏ,
இயக்குநர்கள் குழு: சிஎஸ் கார்த்திக் குமார், ஆர் பாலகுமாரன், கெளதம் ஆனந்த், கே தமிழ்ச்செல்வன், பரத் கிருஷ்ணா, சுபாஷ் சந்திர போஸ்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

Previous Post

மற்றும் ஒர் பரிமாணத்தில் எஸ்.ஆர்.எம்

Next Post

‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

Next Post

'ஹிட்லிஸ்ட்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

Popular News

  • ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு மனிதர் அனைவருக்கும் எதிராக: மனோஜ் பாஜ்பாய், திவ்யா தத்தா மற்றும் போமன் இரானி நடிப்பில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் மேன் இன் டவர்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஹிந்தி ZEE5-ல் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் பஸில் ஜோசப் (Basil Joseph) – எல். கே. அக்ஷய் குமார் (L. K. Akshay Kumar) இணைந்து நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ – முதல் பாடல் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

November 4, 2026

ட்ரூ ஸ்டோரீஸ் தயாரிப்பில் ஷேன் நிகமின் அடுத்த திரைப்படம் ஏற்காட்டில் பூஜையுடன் தொடக்கம்!

November 4, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸர் மூலமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்தது படத்தயாரிப்பு நிறுவனம்!

November 4, 2026

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

November 4, 2026

‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

November 4, 2026

‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

November 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.