• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மூன்று நடிகர்கள், ஒரு கிரிக்கெட் போட்டி மற்றும் வாழ்க்கையை மாற்றும் ஒரு கதை: ‘டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 அன்று ப்ரீமியர் ஆகிறது!

by Tamil2daynews
March 11, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மூன்று நடிகர்கள், ஒரு கிரிக்கெட் போட்டி மற்றும் வாழ்க்கையை மாற்றும் ஒரு கதை: ‘டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 அன்று ப்ரீமியர் ஆகிறது!

 

நம் வாழ்வின் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. சில சோதனைகள் உங்கள் தைரியம், உங்கள் கனவுகள் மற்றும் உங்கள் தியாகங்களை சோதிக்கும். ஏப்ரல் 4 அன்று, நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘டெஸ்ட்’ திரைப்படம் ப்ரீமியர் ஆகிறது.

கிரிக்கெட் மைதானம், மூன்று பேரின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஒரு முடிவை எப்படி எடுக்க வைக்கிறது என்பதுதான் ‘டெஸ்ட்’. இதில் நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோருடன் மீரா ஜாஸ்மினும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் நேரடி  தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

துணிச்சலான மற்றும் அழுத்தமான கதைகளைத் தயாரித்த ‘YNOT’ ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்  எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. இது பற்றி இயக்குநர் சஷிகாந்த் பகிர்ந்து கொண்டதாவது, “பல ஆண்டுகளாக ஒரு தயாரிப்பாளராக நல்ல படங்களைத் தயாரித்துவிட்டு தற்போது ‘டெஸ்ட்’ படத்திற்காக இயக்குநர் நாற்காலியில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியாகவும் தனிப்பட்ட முறையில் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. இந்தத் திரைப்படம் பல உணர்வுகள், சூழ்நிலைகளின் முடிவு,  வாழ்க்கை எப்படி அனைவருக்கும் சில சோதனைகளைத் தருகிறது என்பதைத்தான் ‘டெஸ்ட்’ பேச இருக்கிறது. ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகிய மூவரும் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருப்பது ஸ்பெஷலான விஷயம். இந்த கதையை சாத்தியமாக்கிய ‘YNOT’ ஸ்டுடியோஸ், நெட்ஃபிலிக்ஸ் மற்றும் எனது அணிக்கும் நன்றி. ஏப்ரல் 4 முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘டெஸ்ட்’ படம் ப்ரீமியர் ஆகிறது” என்றார்.
நெட்ஃபிலிக்ஸ் கண்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட், மோனிகா ஷெர்கில் பேசியதாவது, “2025 ஆம் ஆண்டில் எங்கள் முதல் தமிழ் திரைப்படம் ‘டெஸ்ட்’. நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கின்றனர். அழுத்தமான த்ரில்லர் கதையாக இது உருவாகி இருக்கிறது. கிரிக்கெட் பின்னணியில் அமைக்கப்பட்ட கதை இது. ஒரு தேசிய அளவிலான கிரிக்கெட் பிளேயர், ஒரு விஞ்ஞானி மற்றும் ஆர்வமுடைய ஆசிரியர் ஒருவர் ஆகியோரின் வாழ்க்கையை சுற்றி வருகிறது. அவர்களின் லட்சியம், தியாகம் மற்றும் தைரியத்தை சோதிக்கும் உணர்ச்சிகரமான ரோலர்கோஸ்டராக கதை இருக்கும். இயக்குநர் எஸ். சஷிகாந்த் இந்தக் கதையை கடைசி நிமிடம் வரை பார்வையாளர்களைக் கட்டிப் போடும் வகையில் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு ‘டெஸ்ட்’ படத்தைக் கொண்டு சேர்ப்பதில் ஆர்வமாக உள்ளோம்” என்றார்.

விளையாட்டில் ஒரு முடிவும் தருணமும் மறக்க முடியாதது.  ஒரு கணம், ஒரு தேர்வு – அதுதான் ஹீரோவாகவோ வில்லனாகவோ மாற்றும். இந்தத் திரைப்படம் விளையாட்டைப் பற்றியது மட்டுமல்ல, வாழ்க்கை உங்களை நோக்கி வீசும் சோதனைகளையும் பற்றியது.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம்: எஸ்.சஷிகாந்த்,
தயாரிப்பாளர்: சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் (YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பு)
நடிகர்கள்: ஆர். மாதவன், மீரா ஜாஸ்மின், நயன்தாரா, சித்தார்த்

நெட்ஃபிலிக்ஸ் பற்றி:
நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான பணம் செலுத்தும் உறுப்பினர்களுடன் டிவி தொடர்கள், படங்கள் மற்றும் கேம்களை பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் வழங்கி வருகிறது.

உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம், நிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கத் தொடங்கலாம்.

Previous Post

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் & ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

Next Post

பிரைம் வீடியோவின் சுழல் – வோர்டெக்ஸ் S2: பெண்ணியத்தைக் கொண்டாடும் கதை !

Next Post

பிரைம் வீடியோவின் சுழல் - வோர்டெக்ஸ் S2: பெண்ணியத்தைக் கொண்டாடும் கதை !

Popular News

  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; ‘3.6.9’ அனுபவங்களும் அடுத்தக் கட்ட பிரம்மாண்டமும்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.