• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹாலிவுட் பிரபலங்களின் பாராட்டு மழையில் தமிழர் தயாரித்த ‘சிட்டி ஆப் ட்ரீம்ஸ்’ஹாலிவுட் திரைப்படம் …..

by Tamil2daynews
April 21, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஹாலிவுட் பிரபலங்களின் பாராட்டு மழையில் தமிழர் தயாரித்த ‘சிட்டி ஆப் ட்ரீம்ஸ்’ஹாலிவுட் திரைப்படம்…..

தென் தமிழகத்தின் கம்பம் பள்ளத்தாக்கில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஒரு தொழிலதிபராக மிகப்பெரிய வெற்றியை கண்டவர் தமிழர் ரூஃபஸ் பார்க்கர் அவர்கள். சிறுவயது முதல் திரைக்கலை உருவாக்கத்தின் மீதான தனியாத பற்றின் காரணமாக,  2014 -ல் அமெரிக்காவில் P2 FILMS என்கிற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி,  ‘STARVE’ என்கிற ஒரு ஹாரர் படத்தை தயாரித்து  அமெரிக்க ஹாலிவுட் திரைஉலகில்  ஒரு வெற்றித் தயாரிப்பாளராக முத்திரை பதித்தார்…

 ‘STARVE’ திரைப் படம் SITGES போன்ற  சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பாராட்டுகளை பெற்றது. ‘STARVE’ திரைப்படம் தந்த வெற்றியை தொடர்ந்து, ‘WILD NIGHTS WITH EMILY’ என்கிற திரைப்படத்தை தயாரித்தார்…இந்த திரைப்படமும் விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை அடைய, …அடுத்தடுத்து, ஸ்பைடர்மேன் திரைப்படம் மூலம் பிரபலமான ஆண்ட்ரூ கேர்பீல்ட் நடிப்பில் உருவான  ‘UNDER THE SILVERLAKE’ திரைப்படம்…பின்னர்  ‘FLINCH’  திரைப்படம் என திரு. ரூபஸ் பார்க்கர் அவர்களின் உன்னதமான  திரைப் பயணம் மிக நிதானமாக பெரும் வெற்றிகளை நோக்கி பயணித்தது….

இதுவரை பொழுதுபோக்கு  ரீதியிலான திரைப்படங்களை தயாரித்துக்கொண்டிருந்த ரூஃபஸ் அவர்கள், கடந்த  20 வருடங்களாக அமெரிக்க குடிமகனாக தனக்கிருக்கும்  சமூக அக்கறையோடு, அமெரிக்காவின் வெளிஉலகத்திற்கு தெரியாத சமூக அவலத்தை வெளிக்கொணரும்விதமாக, அமெரிக்க திரைவரலாற்றில் அதிகம் சொல்லத்துணியாத  உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு CITY OF DREAMS எனும்  ஒரு திரைப்படத்தை தயாரித்து, பெரும் எதிர்பார்ப்புகளிடையே தற்போது வெளியிட்டு இருக்கிறார்….

இந்த திரைப்படம் அமெரிக்காவில் புலம் பெயர் குழந்தைத் தொழிலாளர்களுக்கு நடக்கும் மிகப்பெரும் அநீதியை பட்டவர்த்தனமாக வெளிஉலகிற்கு தோலுரித்து காட்டி உள்ளது….அமெரிக்காவில் இதுவரை 12 மில்லியன் புலம் பெயர் தொழிலாளர்கள் கடத்தப்பட்டு, அவர்கள் அனைவரும் ஆடைதயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சட்டத்திற்கு புறம்பாக உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளாக்கப் படுவதை உண்மைக்கு வெகு நெருக்கமாக  சொல்லி வெற்றியடைந்திருக்கிறார்… அந்த கடத்தப்பட்ட  12 மில்லியன் குழந்தைகளில் ஒரு சிறுவனின்  உண்மைக் கதையைத்தான்    திரு. ரூஃபஸ் பார்க்கர் அவர்களின் CITY OF DREAMS எனும் இந்த  திரைப்படம்  அமெரிக்காவின் கருப்பு பக்கத்தை வெளிஉலகிற்கு பெரும் வலியாக உணர்த்தியிருக்கிறது…

இப்படி கடத்தப்பட்ட  புலம் பெயர் குழந்தை தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல் மூலம், அமெரிக்கா முழுவதும்  நடந்துகொண்டிருந்த, ஆண்டுக்கு 50 மில்லியன் டாலர் வியாபார நெட்வொர்க்கின் பின்னணியை இந்த திரைப்படம் வெளிக் கொண்டுவந்ததிருக்கிறது…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதல் ஹாலிவுட் நடிகர்களான சில்வெஸ்டர் ஸ்டெலோன் உள்ளிட்ட பலரின் பாராட்டுக்களை பெற்றிருக்கும் இந்த திரைப்படம், LIONS GATE எனும் பெரும் ஹாலிவுட் திரைப்பட வெளியீட்டு நிறுவனத்தின் மூலம், கடந்த  ஆகஸ்ட் மாதம் உள்நாட்டு வெளியீடாக மட்டும்  சுமார் ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டு அமெரிக்க மக்கள் மற்றும் ஊடகங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறது….. அமெரிக்காவின் திரைப் பிரபலங்கள் சில்வஸ்டர் ஸ்டோலன், மெல் கிப்சன், டோனி ராபின்ஸ், மைக் டைசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தை இணைய தளங்கள் மூலமாக பாராட்டி பதிவிட்டுருப்பது  இந்த படத்தின் சமூக தாக்கத்திற்கு பெரும் சான்றாக உள்ளது… *மேலும் இந்த பாராட்டுகளுக்கெல்லாம்  மகுடம்  வைத்தாற்போல், CITY OF DREAMS திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூக அக்கறையை கருத்தில்கொண்டு, சமீபத்தில், இந்த திரைப்படம் ஆஸ்கர் அகாடமி லைப்ரரியில் சேர்க்கப் பட்டிருப்பது மிகவும் பெருமைக்குரிய செய்தி ஆகும்.
Previous Post

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி”.சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் Sports Action Drama படமாக உருவாகிறது.

Next Post

எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் அல்லு அர்ஜுன் -அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணி!!

Next Post

எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் அல்லு அர்ஜுன் -அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணி!!

Popular News

  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்! இயக்குநர் ஷெரீஃபின் இயக்கத்தில் உணர்ச்சிமிகு ‘Feel Good’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “வள்ளி மயில்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • 11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்‌ஷன் & யாதவ் ஃபிலிம் புரொடக்‌ஷன் வழங்கும், ஆறு பாலா இயக்கத்தில், ஆர்.எஸ்.கார்த்திக் நடித்த ‘போர்குடி’ படத்தை உலகளவில் திரையரங்குகளில் பிக்சர் பாக்ஸ் கம்பெனி வில்லியம் அலெக்சாண்டர் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.