• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின், புதிய பான் இந்தியா திரைப்படம் “மைசா” – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

by Tamil2daynews
June 28, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின், புதிய பான் இந்தியா திரைப்படம் “மைசா” – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அட்டகாசமான  ஆக்‌ஷன் அவதாரத்தை  வெளிக்காட்டிய போஸ்டர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு“மைசா” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

பிரபல  இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராக பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம்  இயக்குநராக  அறிமுகமாகிறார். Unformula Films நிறுவனம் இந்தப் படத்தை மிகப்பெரிய  பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார்.

நேற்றைய அட்டகாசமான அறிவிப்பு போஸ்டரைத் தொடர்ந்து,  இந்த திரைப்படத்தின் தலைப்பும், ராஷ்மிகாவின் மிரட்டலான  லுக்குடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்டுள்ளனர்.
தெலுங்கில்: இயக்குநர் ஹனு ராகவபுடி தமிழில்: “குபேரா” படத்தில் நடித்த சக நடிகர் தனுஷ் இந்தியில்: “சாவா” பட நாயகன் விக்கி கௌஷல் மலையாளம் மற்றும் கன்னடத்தில்: துல்கர் சல்மான் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் இந்த போஸ்டர்களை வெளியிட்டனர்.
மைசா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில்,  ஒரு பாரம்பரிய புடவையில், பழங்குடி நகைகள் மற்றும் மூக்குத்தியுடன் காட்சியளிக்கும் ராஷ்மிகா, கோண்ட் பழங்குடியினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தோற்றத்தில் முற்றிலும் புதிய மற்றும் பயமுறுத்தும் முகபாவனையுடன் காட்சியளிக்கிறார். ரத்தம் சிந்திய தோற்றமும், கைப்பிடியில் பிடித்து வைத்திருக்கும் மர்மப் பொருளும், கதையின் மிரட்டலான தருணங்களை நமக்கு முன்வைக்கின்றன.
இயக்குநர் ரவீந்திர புள்ளே  படம் குறித்து கூறியதாவது….

“மைசா இரண்டு வருடங்கள் உழைத்து உருவாக்கிய திரைப்படம். இப்படத்தின் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துள்ளோம், கதை, கதாபாத்திரங்கள், கலை நுணுக்கம் என அனைத்தும் ரசிகர்களைக் கவரும். இப்போது, இந்தக் கதையை உலகிற்கு சொல்லத் தயாராக இருக்கிறோம்.”

கோண்ட் பழங்குடியினரின் சுவாரஸ்யமான உலகத்தை மையமாகக் கொண்ட மிகவும் உணர்ச்சிகரமான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் இது.

இப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம்…,

 “மன உறுதியுடன் பெரும் உழைப்புடன் உருவாக்கப்பட்ட படம் இது. இது அவளின் கதை, அவள் கர்ஜிக்கிறாள். அதைக் கேட்க வேண்டாம், ஆனால் பயப்பட வேண்டும்…. @IamRashmika தனது மிரட்டலான  அவதாரத்தில் #MYSAA ஆக அசத்தியுள்ளார்” என்று பதிவிட்டுள்ளது

இப்படத்தின் முக்கிய தொழில்நுட்பக் குழுவினரை  பற்றிய விவரங்களை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக படக்குழு  தெரிவித்துள்ளது.

திரைப்படக்குழு:
நடிகை: ராஷ்மிகா மந்தனா
இயக்குநர், எழுத்தாளர்: ரவீந்திர புள்ளே
தயாரிப்பாளர்கள்: அஜய் & அனில் சாய்யபுரெட்டி
இணை தயாரிப்பாளர்: சாய் கோபா
தயாரிப்பு நிறுவனம்: Unformula Films
மக்கள் தொடர்பு: சதீஷ்குமார், S2 Media
Previous Post

‘பரமசிவன் பாத்திமா’ இயக்குநர் இசக்கி கார்வண்ணன் கதைநாயகனாக நடிக்கும் ‘ஆட்டி’

Next Post

நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Next Post

நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.