• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சூர்யாவின் மாஸ் திருவிழா ‘கருப்பு’ பட டீசர் வெளியானது !

by Tamil2daynews
July 25, 2025
in சினிமா செய்திகள்
0
சூர்யாவின் மாஸ் திருவிழா ‘கருப்பு’  பட டீசர் வெளியானது !
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சூர்யாவின் மாஸ் திருவிழா ‘கருப்பு’  பட டீசர் வெளியானது !

 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ படத்தின் அப்டேட்டுக்காக, ரசிகர்கள் மிக நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும், இந்த மெகா பட்ஜெட் படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே மாபெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 நிமிடம் 38 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசர், ஒவ்வொரு காட்சியிலும் சூர்யாவின் மாஸ் லுக், அனல் பறக்கும் ஃபிரேம்கள், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வசனங்கள் என சூர்யா ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள  இந்தப் படம், அவரின் வழக்கமான ஃபார்முலாவிலிருந்து விலகி, அதிரடியான மாஸ் கோணத்தில், துணிச்சலான புது முயற்சியாக அமைந்துள்ளது. சூர்யா, ஆர்ஜே பாலாஜி இணைந்திருக்கும் இந்த புதுக்கூட்டணி, அனைத்து ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையிலான அட்டகாசமான படைப்பை வழங்கவுள்ளது.

ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு, ஒவ்வொரு ஷாட்டையும் அட்டகாசமாக காட்சிப்படுத்தி, அழகும் சேர்த்துள்ளது. அதற்கு இணையாக, சாய் அபயங்கர் பின்னணி இசை, டீசரை உணர்வுமிக்கதாகவும் அதிரடி நிறைந்ததாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. இப்படம் அவரது இசை பயணத்தில் முக்கியமான  படியாக அமைந்துள்ளது.

அருண் வெஞ்சரமூடுவின் கலை இயக்கம், படத்தின் ஒவ்வொரு இடத்தையும் மிக நுணுக்கமான வடிவமைப்புடன், அழுத்தமான, உணர்வுப்பூர்வமான தருணங்களாக அழகாக்கியுள்ளது.

நாயகி த்ரிஷாவின் தோற்றம் டீசரில் இடம்பெறவில்லை. ட்ரெய்லருக்கான சர்பரைஸாக அது இருக்கும். ஆனால் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி, ஷிவதா, நட்டி, மற்றும் சுப்ரீத் ரெட்டி போன்ற திறமைமிக்க நடிகர்கள் இப்படத்தில் அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளனர்.

கலைவாணனின் எடிட்டிங் மற்றும் அன்பறிவ் – விக்ரம் மோர் ஆகியோரின் ஆக்‌ஷன் காட்சியமைப்புகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெரும் திருவிழா வெளியீடாக  வெளியாகவுள்ள இப்படம், டீசரிலேயே கொண்டாட்டத்தை உறுதி செய்துள்ளது.  இதோ ரசிகர்களுக்கான கொண்டாட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிவிட்டது.
Previous Post

”பிளாக்மெயில்’ படம் த்ரில், சர்ப்ரைஸ் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என அனைத்தும் கலந்து குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் படமாக இருக்கும்”- இயக்குநர் மு. மாறன்!

Next Post

அட்ரஸை தொலைத்த மக்களின் வலியை பாடலாக்கிய சினேகன்;; பாடலை வெளியிடுகிறார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்

Next Post

அட்ரஸை தொலைத்த மக்களின் வலியை பாடலாக்கிய சினேகன்;; பாடலை வெளியிடுகிறார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்

Popular News

  • ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’  படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

    ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “நடிகர் வித்யுத் ஜாம்வால் தல்சிம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்”- ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ இயக்குநர் கிட்டாவ் சக்குராய்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘டோரதி’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு கிடைத்து வரும் ரசிகர்களின் அன்பு எனக்கு மகிழ்ச்சியையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது”- நடிகர் முத்துக்குமார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ”’டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது”- நடிகை ஜீவா சுப்பிரமணியம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

October 17, 2026
ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’  படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

October 17, 2026

“‘டோரதி’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு கிடைத்து வரும் ரசிகர்களின் அன்பு எனக்கு மகிழ்ச்சியையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது”- நடிகர் முத்துக்குமார்!

October 17, 2026

துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

October 17, 2026

”’டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது”- நடிகை ஜீவா சுப்பிரமணியம்!

October 17, 2026

நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

October 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.