இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் 2021- ஆம் ஆண்டு வெளியான படம் “சார்பட்டா பரம்பரை”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே தனது கதாபாத்திரதை பதிய வைத்து “டான்சிங் ரோஸ்”-ஆக வலம் வந்தவர் நடிகர் ஷபீர் கல்லரக்கல்.
தற்போது சமீபத்தில் வெளியான மதராசி மற்றும் தண்டகாரண்யம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் வெளியானதை தொடர்ந்து ரசிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகர் ஷபீர் கல்லரக்கல் அவர்களின் சார்பில்,
இரண்டு படங்களிலும், வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பாத்திரங்களுக்காக ரசிகர்களின் மனமார்ந்த வரவேற்பும், ஊடகங்களின் அன்பான வார்த்தைகளும், இந்தப் பயணத்தை இன்னும் நிறைவானதாக மாற்றியுள்ளன.
என்மீது நம்பிக்கை வைத்து முக்கியமான கதாப்பாத்திரங்களை வழங்கிய இயக்குனர்களுக்கும், படங்களை உயிர்ப்பித்து ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த தயாரிப்பு நிறுவனங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தக் கதாப்பாத்திரங்களுக்கு ரசிகர்கள் தெரிவித்த பாராட்டுச் சொற்கள் நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறேன். அந்த சொற்கள், மேலும் சவாலான கதாபாத்திரங்களைத் தேடி, முழுமையான பணியை வழங்கும் எனது உறுதியை வலுப்படுத்துகின்றன. மேலும், இந்த மாதம் முழுவதும் செய்திகள், பேட்டிகள், சிறப்புக் கட்டுரைகள் மூலம் இரு படங்களையும் வலுப்படுத்திய ஊடக நண்பர்களுக்கு அன்பான நன்றி.
இயக்குனர்கள் ஏ. ஆர். முருகதாஸ் சார் மற்றும் அதியன் அதிரை தோழர் ஆகியோருக்கு, அவர்களுடைய கதை சொல்லும் தெளிவிற்கும், என்னை நம்பியதற்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். மேலும், ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ், நீலம் புரொடக்ஷன்ஸ், மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் உறுதியான ஆதரவிற்கும், எனது பயணத்திற்கு உயிர் ஊட்டும் ரசிகர்களின் உற்சாகமான வரவேற்பிற்கும், என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.