• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் விக்ரம் பிரபு & L.K.அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) படம், வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று உலகமெங்கும் வெளியாகிறது!!

by Tamil2daynews
October 11, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் விக்ரம் பிரபு &  L.K.அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) படம், வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று உலகமெங்கும் வெளியாகிறது!!

 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். மற்றும் இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

டாணாக்காரன்  இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை  இயக்கியுள்ளார்.

ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க,  ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார்.  இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ  சார்பில்  SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார்.    நிர்வாக தயாரிப்பாளராக  அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.

முன்னதாக ஒரு நீதிமன்ற பின்னணியில் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை, அழுத்தமாக வெளிப்படுத்தும்படி வெளியான, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், படக்குழு தற்போது வெளியீட்டு தேதியை ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இது ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.

இப்படத்தின்  படப்பிடிப்பு முழுமையாக முடிந்து  இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர்  இசை மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது

Previous Post

காந்தாரா சாப்டர் -1 – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

இசைஞானி இளையராஜா அவர்கள் இசை மழையில் “தேசிய தலைவர்”

Next Post

இசைஞானி இளையராஜா அவர்கள் இசை மழையில் "தேசிய தலைவர்"

Popular News

  • மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் “பெத்தி” படப்பிடிப்பு நிறைவு; ஜூன் 4 உலகமெங்கும் வெளியாகிறது !

    0 shares
    Share 0 Tweet 0
  • கட்டம் சொல்லுது விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவர் ‘சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5-இன் “அய்யனா மானே” சீரிஸ், 5 கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் “பெத்தி” படப்பிடிப்பு நிறைவு; ஜூன் 4 உலகமெங்கும் வெளியாகிறது !

May 6, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது!

May 6, 2026

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

May 6, 2026

கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’-இல் திரையிடப்படும் KVN புரொடக்ஷன்ஸ், தெஸ்பியன் ஃபிலிம்ஸின் ‘பாலன் த பாய்’

May 6, 2026

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!

May 6, 2026

ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.

May 6, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.