ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கும் இந்தப் படத்தை அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார். இதில் ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கின்றனர்.
முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
வில்லனாக நடித்து பின் ஹீரோவாக சில படங்களில் நடித்த ஆனந்தராஜ் ஒரு கட்டத்தில் காமெடி படத்திலும் நடிக்க தொடங்கினார். தற்போது மீண்டும் அவருக்கு ஹீரோ வாய்ப்பு அமைந்திருப்பது அவரது நடிப்பு வாழ்க்கையில் ஒரு சுழற்ச்சியாக மாறி இருக்கிறது.
மதராஸ் மாபியா கம்பெனி பட ஹீரோவே ஆனந்தராஜ்தான் அவரை சுற்றித்தான் முழு கதையும் பின்னப்பட்டிருக்கிறது. வில்லத்தனத்துக்கு வில்லத்தனம் , அதே சமயம் தன்னை என்கவுண்டர் செய்ய வரும் சம்யுக்தாவிட மிருந்து தப்பிப்பதற்காக அவர் செய்யும் ஹீரோயிசம் இரண்டுமே ரசிக்கும்படி உள்ளது.
தொடக்கத்தில் ஒன்றிரண்டு காட்சியில் தலை காட்டிய ஆனந்தராஜுக்கு அடுத்த காட்சியிலேயே மாலை போட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதை பார்த்ததும் அதுக்குள்ள ஆனந்தராஜ் கதாபாத்திரம் முடிந்துவிட்டதா என்று ஷாக் ஏற்படுகிறது. ஆனால் அதன் பிறகு பிளாஷ்பேக்கில் அவரது ரவுடியிச கதை தொடங்கி ஒவ்வொரு காட்சியும் கத்திக்குத்தாக இருந்தாலும் அதிலும் ஒரு நகைச்சுவை இழையோட நடித்து வித்தியாசமான ஆனந்தராஜாக ஆச்சரியப்பட வைக்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சம்யுக்தா பாய்ந்து பறந்து ஆக்சன் அதிரடியில் தில் காட்டி இருக்கிறார்
வி சுகந்தி அண்ணாதுரை தயாரித்திருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் மெலடி, குத்து, கானா என வகைக்கு ஒரு பாட்டு கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அசோக் ராஜ் கேமரா ஒரு பிளாக் காமெடி படத்தை பளிச் காமெடியாக காட்டி இருக்கிறது.
இயக்குனர் ஏ எஸ் முகுந்தன் ரவுடியிச கதையாக இருந்தாலும் ரத்தம் குத்து வெட்டு என்று தலை சுற்ற வைக்காமல் குடும்ப செண்டிமெண்ட், மகள் செண்டிமெண்ட் கலந்து ஒரு தாதா குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை காமெடியுடன் தந்திருக்கிறார்.









