வந்திருக்கும்‘தாவூத்’
இந்த படத்தை TURM புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் S. உமா மகேஸ்வரி தங்களது இரண்டாவது படைப்பாக மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.
பரோல்’, ‘உடன்பால்’, ‘பெண்குயின்’, ‘சேதுபதி’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிங்கா காதநாயகனாக நடித்துள்ளார். சாரா ஆச்சர் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்த படத்திற்கு சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். அருண் பாரதி பாடல்களுக்கு ராக்கேஷ் அம்பிகாபதி இசையமைத்துள்ளார். R.K.ஸ்ரீநாத் எடிட்டிங் செய்ய, கலை இயக்கத்தை ஜெய் முருகன் மேற்கொள்ள, ஸ்ரீக்ரிஷ் நடனம் அமைத்துள்ளார். பத்திரிக்கை தொடர்பு – புவன் செல்வராஜ், தயாரிப்பு – S. உமா மகேஸ்வரி.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பிரசாந்த் ராமன்.
வெளிநாட்டு போதை மருந்தை சப்ளை செய்யும் ரவுடிகள் மூர்த்தி (சாய் தீனா), விசாகம் (அபிஷேக் ) இடையே மோதல் ஏற்படுகிறது. சப்ளை செய்வதில் சிறிது காலதாமதமானால் ஆளையே கொல்லும் கூட்ட தலைவன் தாவூத். இவர்களை சுத்துபோட்டு போலீஸ் துரத்துகிறது. இதனால் புது ஆளை வைத்து போதை மருந்து கடத்த திட்டமிடுகின் றனர். இதன் கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பமாக அமைகிறது.

கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருந்து ரவுடி கூட்டத்தையே நடுங்க வைக்கும் அந்த தாவூத் யார் என்ற ஆவல் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க அதிகரிக் கிறது. அந்த தாவூத் யார் என்று காட்டாமலே டைரக்டர் சஸ்பென்ஸ் வைத்திருப்பது இரண்டாம் பாகத்துக்கு லீட் கொடுத்திருக்கி றார்கள் என்று தோன்று கிறது.
சாரா அக்சர் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். விதவிதமாக காட்டியூம் அணிந்து கிளாமர் கேர்ளாக வருகிறார்.யாருக்கு ஜோடி என்றுதான் புரியவில்லை.
காமெடி நடிகர் ஸாரா நக்கல் நய்யாண்டி சிரிப்பும், டபுள் மீனிங் டயலாக் முகசுழிப்பும் ஏற்படுத்துகிறது.
சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக்,ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் நடித்துள்ளனர்.
ராக்கேஷ் அம்பிகாபதி இசை, சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் ஒளிப்பதிவு ஓ கே.









