‘நேஷனல் க்ரஷ்” ரஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா ‘ படத்தின் டீசர் வெளியீடு
அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் பெண்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் பொழுதுபோக்குத் திரைப்படமான ‘மைசா’வில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படம் அதன் சுவாரஸ்யமான தலைப்பு மற்றும் கவனத்தை ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் மூலம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ‘மைசா’ திரைப்படம்- ஒரு பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான பான்-இந்தியா அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்று, படக்குழுவினர் படத்தின் டீசரை வெளியிட்டனர்.
இந்த வீடியோவில், ‘மைசா’வின் இருண்ட மற்றும் தீவிரமான உலகத்தைப்பற்றிய ஒரு விறுவிறுப்பான பார்வை இடம்பெறுகிறது. மேலும் இந்த காணொளி, கதாநாயகியின் தாயின் சக்திவாய்ந்த பின்னணிக் குரலுடன் தொடங்குகிறது. அவர் தனது மகளின் மரணத்தை மீறிய துணிச்சலைப் பற்றிப் பேசி, உலகத்தைப்பார்தது “அந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள — மைசா” என்று உரக்க வலியுறுத்துகிறார்.
இந்தக் கதாபாத்திரத்திற்காக ஒரு தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ரஷ்மிகா மந்தனா, தனது திரை வாழ்க்கையிலேயே மிகவும் துணிச்சலான மற்றும் வன்முறை நிறைந்த நடிப்பை வழங்கியுள்ளார். இயல்பான மற்றும் முரட்டுத்தனமான தோற்றத்தில், அவர் தலைப்புக்கான கதாபாத்திரத்தை வியக்க வைக்கும் தீவிரத்துடன் சித்தரிக்கிறார். டீசரின் இறுதித் தருணங்களில் அவர் எழுப்பும் கர்ஜனை, ‘மைசா’வின் கட்டுக்கடங்காத கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்துகிறது.
இயக்குநர் ரவீந்திர புல்லேவுக்கு இது முதல் படம் என்றாலும் இந்தத் திரைப்படத்தை குறிப்பிடத்தக்க ஆழத்துடனும், உறுதியுடனும் கையாண்டுள்ளார். கதைக்களம் அசைக்க முடியாத தீவிரத்துடன் உள்ளது, மேலும் ரஷ்மிகாவின் கதாபாத்திரம் இதற்கு முன் பார்த்திராத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘மைசா’ எனும் பெண் கதாநாயகியை- வலிமைமிக்க கோண்ட் பழங்குடிப் பெண்ணாக சித்தரிக்கிறது. இது வலிமை, ஆக்ரோஷம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான ஆழம் ஆகியவற்றால் குறிக்கப்படும் ஒரு தனித்துவமான சித்தரிப்பாகும். இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா உடன் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம் மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் சக்திவாய்ந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் பி. கிருஷ்ணாவின் காட்சிகள் கதைக்களத்தின் இருண்ட மற்றும் யதார்த்தமான தொனியை மேம்படுத்துகின்றன, அதே நேரத்தில் ஜேக்ஸ் பிஜாயின் துடிப்பான பின்னணி இசை மைசாவின் கதாபாத்திரத்திற்கு கூடுதலான வலிமையை சேர்க்கிறது. சர்வதேச சண்டைப் பயிற்சியாளரான ஆண்டி லாங், தனது நிபுணத்துவத்துடன் கூடிய சண்டைக் காட்சிகளை யதார்த்தமான நம்பகத்தன்மையை வழங்கியுள்ளார், இது டீசரில் தெளிவாகத் தெரிகிறது. இது சமரசமற்ற தொலைநோக்குப் பார்வையும் பிரம்மாண்டமும் அளிக்கிறது.
தற்போது தெலுங்கானா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இப்படத்தின் டீசர் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை கணிசமாக அதிகரித்துள்ளது. அதிரடிச் சண்டைக் காட்சிகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், அதன் இயல்புத்தன்மை மாறாமலும், உயிரோட்டத்துடனும், அதன் ஆன்மாவிற்கு உண்மையாக இருப்பதையும் உறுதி செய்வதற்காக, படக்குழுவினர் விரிவான ஒத்திகைகள் முதல் படப்பிடிப்பு நடைபெறும் தளம் தொடர்பான விரிவான கள ஆய்வு செய்வது வரை கடுமையாக உழைத்து வருகின்றனர்.
நடிகர்கள்: ரஷ்மிகா மந்தனா, ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் மற்றும் பலர்