• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!

by Tamil2daynews
April 10, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!

விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில்,  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில்,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ்,  “முத்து என்கிற காட்டான்”.

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், 2026 மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த  சீரிஸ்  ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.

இந்நிகழ்வினில்..

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசியதாவது..,
இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கனும் என்று தான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம். இடையில் இது நின்று விட்டது என்ற நிலை வந்த போதும், அதுவாக மீண்டும் நடந்து இந்த இடத்தை வந்தடைந்திருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி கதை இருக்கு. ஒவ்வொரு காட்சியும்  ஒரு வாழ்க்கையைச் சொல்லும் மாதிரி இருக்கும். அதுதான் இந்த புராஜக்டை எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆக்குது. இந்தக் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதனோட வாழ்க்கையை பிரதிபலிக்குது. எந்த பெரிய விஷயங்களும் இல்லாமல், சிம்பிளான வாழ்க்கையிலேயே எவ்வளவு அழகு இருக்குன்னு காட்டுது.

இயக்குநர் மணிகண்டன் தான் அஜித்குமாரை அறிமுகப்படுத்தினார்.   இந்த படைப்பில்  உழைத்த அத்தனை பேரும்  முழு அர்ப்பணிப்போடு உழைத்தார்கள்.  கதை  நம்ம வாழ்க்கையோட நெருக்கமாகவும் இருந்தது. அதனால அந்த கேரக்டருக்குள் போவது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது.

முத்து மணிகண்டன் கூட்டி வந்தவர், பல வருட நட்பு நான் பொறாமைப்படும் அளவு நடிப்பை கொட்டியிருக்கிறார். வடிவேல் முருகன் என்னை ஆச்சரியப்படுத்தினார். அவர் பட விமர்சனம் செய்பவர் எப்படி நடிப்பார் என நினைத்தேன் ஆனால் அதைத்தாண்டி அசத்திவிட்டார். பார்வதியும் அவர் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.

இந்த சீரிஸ் முழுதாக உருவாகி வந்ததற்கு Pradeep Milroy Peter (Creative Head, Hotstar Specials- Tamil ) , Senthil (Executive Producer, HotStar Specials) மிக முக்கியமான காரணம். எல்லோரையும் ஒன்றிணைத்து, அனைவருக்கும் தேவைப்பட்டதை செய்து இந்த இடத்திற்கு சீரிஸை எடுத்து வந்துள்ளார். அவருக்கு நன்றி.  செட்டில்  நாங்க எல்லாரும் ஒரு ஃபேமிலி மாதிரி தான் இருந்தோம். ஒவ்வொருத்தரும் ஒருத்தரை சப்போர்ட் பண்ணி தான் இந்த படைப்பை முடித்தோம்.  இந்த படைப்பில் பணியாற்றிய அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றி.ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் பேசியதாவது…,
“என்னைப் பற்றி சொன்னா, இந்தப் ப்ராஜெக்ட் எனக்கு ஒரு தனியான உணர்வை கொடுத்தது. இந்தப் ப்ராஜெக்ட்டை உருவாக்கி கொண்டு வந்த விதம் எனக்கு ரொம்ப நெருக்கமான அனுபவமாக இருந்தது.

விஜய் சேதுபதி மணிகண்டன் உடன் நான் பல வருடங்களாக வேலை செய்து வருகிறேன். நாங்கள் சேர்ந்து செய்த பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன —96, ஆண்டவன் கட்டளை போன்ற படங்கள் மக்களின் மனதில் இடம் பிடித்தவை.
அந்த பயணம் எனக்கு மிகவும் முக்கியமானது. முதன்முதலாக அவரை நேரில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. இந்த சீரிஸில் திருவிழா காட்சியில் அவர் நடித்த விதம்  எனக்கு பெரும் வியப்பை தந்தது.  நம்பிக்கையை அளித்தது. நாங்கள் நண்பர்களாக வளர்ந்தோம். அந்த நட்பு எங்கள் வேலைகளிலும் தெரியும். ஒவ்வொரு காட்சியிலும் அந்த புரிதல் வெளிப்படும்.

இந்தப் ப்ராஜெக்ட்டில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை அழகாக உயிர்ப்பித்துள்ளனர்.இப்படிப்பட்ட ஒரு நல்ல குழுவுடன் வேலை செய்தது எனக்கு பெருமையாக உள்ளது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசியதாவது..,
இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவத்தையும், அந்த நினைவுகளையும் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போது, அது ரொம்ப செழுமையானதும், மனதை கவர்ந்ததும், மிகவும் உஷ்ணமான உணர்வுகளையும் தருகிறது. ஒவ்வொரு நாளும் செட்டில் இருந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. வேலை மிகவும் நன்றாக இருந்தது. குழுவில் இருந்த அனைவரும் அருமையானவர்கள்.

நான் எப்போதும் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வோடு தான் இருந்தேன். அது ஒரு குடும்பத்தோடு இருப்பது போல இருந்தது. இந்த அழகான வாய்ப்பை எனக்கு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், கலைஞர்கள் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கும், மீண்டும் உங்களிடம் நிற்கும் இந்த தருணத்திற்கும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.

பல்லவி பேசியதாவது..,
“இந்தப் ப்ராஜெக்ட்டில் நான் செய்தது ஒரு சிறிய பங்களிப்புதான். ஆனாலும், விஜய் சேதுபதி அவர்களின் கதாபாத்திரத்தை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது — அது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். ஒரு நாள் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ‘சிரிக்கும் சேதுபதியை உருவாக்கணும்’ என்று சொன்னார்கள். நம்ம சினிமா துறையில் அது அதிகமாக செய்யப்படாத ஒரு விஷயம். அதனால் அது எனக்கு ஒரு புதிய சவாலாக இருந்தது. அந்த அனுபவம் உண்மையிலேயே அருமையானது. நான் செய்த இந்த வேலை இவ்வளவு நன்றாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த முழு தொடரும் பெரிய வெற்றியாக அமைந்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்று இங்கு என்னை அழைத்து கௌரவித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மிக்க நன்றி!”
நடிகர் முத்துக்குமார் பேசியதாவது..,
 விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருடனான நட்பு எனக்கு நல்ல கேரக்டரை பெற்றுத் தந்தது.  இந்தக் கதையில் என்  கேரக்டர் மிகவும் முக்கியமானது. அந்த கேரக்டர் திரையில் வெளிவந்த பிறகு, என்னை பார்க்கும் மக்களின் பார்வை எனக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை தருகிறது. அவர்கள் அதை ரசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இந்த குழுவில் பணியாற்றியது  ஒரு அருமையான அனுபவம். இங்கே இருந்த ஒவ்வொருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த நேரத்தில் அஜித் குமார் சாருக்கு நான் குறிப்பாக நன்றி சொல்லணும். சார், உங்களோட ஆதரவு எனக்கு ரொம்ப முக்கியம். நீங்கள் எப்போதும் ஊக்கப்படுத்துறது எனக்கு ஒரு பெரிய வலிமை.

அதேபோல் முத்து சார், சமி சார் — உங்களோட வேலை, உங்களோட வழிகாட்டுதல் எல்லாம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்த டீம்ல எல்லாரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்தது ஒரு பெரிய அனுபவம். இன்னும் நிறைய நல்ல கதாபாத்திரங்கள் செய்யணும், இன்னும் பல பரிமாணங்களில் நடிக்கணும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. இந்த ப்ராஜெக்ட் அதற்கு ஒரு பெரிய உந்துதலை கொடுத்திருக்கிறது. என்னை நீங்கள் இவ்வளவு அன்போடு ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி!.
நடிகர் வடிவேல் முருகன் பேசியதாவது..,
“நான் வெளிச்சத்துக்கு பழகியவன் இல்ல. இந்த மாதிரி ஒரு மேடையில் நிற்பது எனக்கு பெரிய விஷயம். ஆனா என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மணிகண்டன் சார், விஜய் சேதுபதி சார், ஹாட்ஸ்டார் குழுமம் எல்லோருக்கும் நன்றி. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் வாழ்க்கையில் ஒரு பெரிய முதல் படி மாதிரி. அதை நினைக்கும்போது கொஞ்சம் எமோஷனாகவே இருக்கிறது.

இந்த சீரிஸில் என்னுடன் நடித்த உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.

நடிகை பார்வதி பேசியதாவது..,
“எல்லாருக்கும் வணக்கம்.நான் பேசுற இந்த தருணம், என்னோட முதல் வெற்றி விழா. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. முக்கியமாக, இந்த புராஜக்ட்டுக்கு வழிகாட்டியாக இருந்த பிரதீப் சார், கிருஷ்ணன் குட்டி சார், இயக்குநர் மணிகண்டன்  அவர்களுக்கு நான் பெரிய நன்றி சொல்லணும். அவர்களோட சப்போர்ட்  இல்லாம இது இவ்வளவு அழகா வந்திருக்காது. இந்தக் கதையில் ‘லலிதா’ என்ற கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததுக்குப் பிறகு, மக்கள் என்னைப் பார்க்கும் பார்வையே மாறி விட்டது. ‘அந்த ஊர்க்காரப் பொண்ணு மாதிரி ரொம்ப நிஜமா, அழகா செட்டாகிட்டீங்க’ன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னுள்ளே இருந்த இன்னொரு முகத்தை வெளியே கொண்டு வர இந்த வாய்ப்பு உதவியது. அதற்காக நான் ரொம்ப நன்றி.இந்த சீரிஸில் விஜய் சேதுபதி சாருடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம் அடுத்தடுத்த படைப்புகளில் நடக்கும் என நம்புகிறேன். நன்றி.
ஜியோ ஹாட் ஸ்டார் சார்பில் (Executive Producer, HotStar Specials) செந்தில் பேசியதாவது..,
இப்போ நிறைய சீரிஸ்களையும், வெப் சீரிஸ்களையும் நாம பார்க்கிறோம். ஆனால் இந்த ஷோ எல்லா ஷோக்களையும் விட ஒரு சிறப்பான சீரிஸாக வந்துள்ளது.இந்த ஷோ எட்டிச்சிருக்கும் உயரம் உண்மையிலேயே பெரிய விஷயம். இது சாதாரண சக்சஸ் இல்லை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த சக்சஸுக்கு  முக்கிய காரணம் இந்த டீம் தான். டீம் என்று சொல்ல கூடாது… இது  விஜய் சேதுபதி ‘ஆர்மி’. இங்க இருக்கிற ஒவ்வொருத்தரும் தங்களுக்கென்ன வேலை  செய்யணும் என்று சரியாக தெரிந்தவர்கள். அதனால தான் இந்த புராஜக்ட் இவ்வளவு வெற்றியாகி இருக்கிறது. ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்த சீரிஸில் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், VJ. பார்வதி, அபி நக்ஷத்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில் உருவாகியுள்ள இந்த சீரிஸை,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த சீரிஸ் வரும் 2026 மார்ச் 27 ஆம் தேதி முதல்  ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

தொழில் நுட்ப குழு
தயாரிப்பு  – ஜியோ ஹாட்ஸ்டார், விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்
இயக்குநர்கள் –  B. அஜித் குமார், M. மணிகண்டன்
கதை / திரைக்கதை – M. மணிகண்டன், B.அஜித் குமார், L.A. ராஜ்குமார்
நிர்வாக தயாரிப்பாளர் (Vijay Sethupathi Productions)  – VR குமார்,  S சந்திரசேகரன்
ஒளிப்பதிவு –  N. சண்முக சுந்தரம், மது நீலகண்டன்
எடிட்டர் –  B. அஜித் குமார்
இசையமைப்பாளர் –  ராஜேஷ் முருகேசன்
கலை இயக்குநர் – ஜாக்கி, சாபு மோகன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

Previous Post

“ராக்கா” – அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர் !!

Next Post

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!

Next Post

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!

Popular News

  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • ’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.