• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர்கள் அஜித்குமார்- ஷாலினி இணைந்து நடித்த ரொமாண்டிக் கதையான ‘அமர்க்களம்’ திரைப்படத்தின் மறுவெளியீட்டிற்கான டிரெய்லர் ரசிகர்களின் அன்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது!

by Tamil2daynews
April 23, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர்கள் அஜித்குமார்- ஷாலினி இணைந்து நடித்த ரொமாண்டிக் கதையான ‘அமர்க்களம்’ திரைப்படத்தின் மறுவெளியீட்டிற்கான டிரெய்லர் ரசிகர்களின் அன்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது!

 

நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் வெளியான ‘அமர்க்களம்’ திரைப்படம் ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. அஜித்குமாரின் 25 ஆவது திரைப்படமான ‘அமர்க்களம்’ ஆக்‌ஷன், காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்கள் என தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனியிடம் பிடித்துள்ளது.

பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக தற்போது வெளியாகியுள்ள படத்தின் புதிய டிரெய்லர் பல அழகிய தருணங்களைக் கொண்டுள்ளது. ஆன்-ஸ்கிரீனில் மலர்ந்த அஜித் மற்றும் ஷாலினியின் காதல் நிஜ வாழ்க்கையிலும் சாத்தியமாகியதால் ரசிகர்களுக்கும் இந்தப் படம் ஸ்பெஷலான ஒன்று. படம் அஜித்-ஷாலினியின் திருமண நாளன்று மீண்டும் வெளியாவது கூடுதல் சிறப்பு. ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை தமிழகமெங்கும் திரையரங்குகளில் மறு  வெளியீடு செய்கிறார்.

தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய டிரெய்லர் பல உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் படத்தை மீண்டும் பார்க்க இருக்கும் ரசிகர்களுக்கு கூட புது அனுபவத்தை தரும் வகையில் அமைந்துள்ளது. இந்த டிரெய்லர் ஆக்ஷனை மட்டும் மையமாக மட்டுமே கொள்ளாமல், கதையின் உணர்ச்சி ஆழத்தையும் காதலையும்  முன்னிறுத்தி வெளியாகியுள்ளது. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சங்களில் ஒன்று அஜித்குமார் மற்றும் மறைந்த திறமையான நடிகர் ரகுவரன் இருவருக்கும் இடையிலான ஃபேஸ்- ஆஃப் காட்சிகள்.

பரத்வாஜ் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ஹிட். குறிப்பாக, எவர்கிரீன் டிராக்கான ‘உன்னோடு வாழாத’ பாடல் இப்போதும் பல காதலர்களுக்கு காதல் கீதம். துள்ளல், ஆத்மார்த்தமான மெலோடிஸ் மற்றும் உணர்வுப்பூர்வமான பாடல்கள் என படத்தின் ஆல்பம் இப்போதும் இசை ஆர்வலர்கள் மத்தியில் தனியிடம் பிடித்துள்ளது.

டிரெய்லருக்கு கிடைத்துள்ள பாசிட்டிவான ரெஸ்பான்ஸை அடுத்து ஏப்ரல் 24 அன்று மறுவெளியீடு செய்யப்படும் ‘அமர்க்களம்’ படம் பழைய ரசிகர்களுக்கு நினைவுகளை மீட்டெடுக்கும் அனுபவமாகவும், இன்றைய தலைமுறைக்கு புதிய அனுபவமாகவும் அமையும்.

Previous Post

பூரி ஜெகன்நாத் 26 ஆண்டுகள் திரைப்பட பயணம் நிறைவு –“ஸ்லம் டாக்” ஒரு ஸ்பெஷல் படம் விரைவில் திரையில் – விஜய் சேதுபதி பாராட்டு! !!

Next Post

‘உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!

Next Post

'உப்பு புளி காரம்' ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!

Popular News

  • கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அதகள காமெடி!!

    கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அதகள காமெடி!!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் ரவி மரியா, ராதாரவி நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.