• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சட்டென்று மாறுது வானிலை – விமர்சனம்

by Tamil2daynews
May 17, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சட்டென்று மாறுது வானிலை – விமர்சனம் 

பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில்  வெளியாகியுள்ள திரைப்படம் ‘சட்டென்று மாறுது வானிலை’. ஏ.ஆர். முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய பாபு விஜய் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஒரு பொறுப்பற்ற அனாதை இளைஞனுக்கும், அமைச்சரின் மகளுக்கும் இடையில் ஏற்படும் காதல் மற்றும் அவர்கள் இணையும் திருமணத்திற்குப் பிறகு வரும் சவால்களை மையமாகக் கொண்ட ரொமான்டிக் த்ரில்லர் படம் இது.

சட்டென்று மாறு வாணிலை’ படத்தின் கதை, கவலையற்ற ஒரு அனாதைச் சிறுவனும் அமைச்சரின் மகளும் உணர்ச்சிவசப்பட்டுத் திருமணம் செய்துகொள்வதையும், அதன் விளைவாக அவர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான தனிப்பட்ட மற்றும் புறச் சவால்களையும் மையமாகக் கொண்டுள்ளது. நிதி நெருக்கடிகள் மற்றும் சக்திவாய்ந்த எதிரிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களுடன் அந்தத் தம்பதியினர் போராடுவதையும், அதே சமயம் தங்கள் உறவைப் பாதுகாக்க அவர்கள் முயற்சிப்பதையும் படத்தின் சுருக்கம் எடுத்துக்காட்டுகிறது. காதல், நாடகம் மற்றும் மோதல் ஆகிய கூறுகளைக் கலந்து, பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த விறுவிறுப்பான கதைக்களம் அமைந்துள்ளது.

ஆதரவற்றவரான நாயகன் ஜெய், ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நாயகி மீனாட்சி கோவிந்தராஜனை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். அன்றைய தினமே மீனாட்சியை ஒரு பிரச்சனையில் இருந்து காப்பாற்றுகிறார் ஜெய். இதன்பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் கொடைக்கானலுக்கு ஹனிமூன் செல்கிறார். அங்கு கருடன் ராம் நடத்தி வரும் ரெசாட்டில் தங்குகிறார்கள். அங்கிருந்து வந்த பிறகு ஜெய், மீனாட்சி இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது.
மேலும் கருடன் ராம் ரெசாட்டில் ஏதோ மர்மம் இருப்பதையும் ஜெய் அறிந்து கொள்கிறார். ஒரு பக்கம் மீனாட்சியின் தந்தையான அமைச்சர் அஜய், மீனாட்சியை இரண்டாம் தாரமாக ஒருவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார். மீனாட்சியின் நண்பர் சொத்துக்காக மீனாட்சியை திருமணம் செய்ய நினைக்கிறார்.

இவ்வளவு பிரச்சனையில் ஜெய் மற்றும் மீனாட்சி இருவரும் வாழ்க்கையில் ஒன்றாக வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஜெய், ஐடி ஊழிய இளைஞராக நடித்து கவர்ந்து இருக்கிறார். காதல், நடனம், நடிப்பு, அழுகை, பாசம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக நாயகி மீனாட்சி உடன் ரொமான்ஸ் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜெய் மீது பாசம், தந்தை மீது வெறுப்பு, நண்பன் மீது கோபம் என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் கருடன் ராம். இவருக்கு இணையாக வில்லனிசம் செய்து இருக்கிறார் அஜய். யோகி பாபுவின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது.
கமர்ஷியல் படத்திற்கு உண்டான அனைத்து அம்சங்களையும் வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாபு விஜய். காதல், கிரைம், ஆக்ஷன், திரில்லர் என திரைக்கதை விறுவிறுப்பாக செல்கிறது. மெதுவாக தொடங்கும் திரைக்கதை இறுதியில் வேகம் எடுத்து இருக்கிறது. கொஞ்சம் லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
பிவி ஃபிரேம்ஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், படத்தொகுப்பாளர் டார்லிங் ரிச்சர்ட்சன், மற்றும் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட திறமையான தொழில்நுட்பக் குழுவினர் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் பாடல்களில், பாரதியார், சினேகன், கிரிஷ் ஜி, மற்றும் எம்.எஸ். கிருஷ்ணா போன்ற குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் வரிகளும், தேவா, ஸ்ரேயா கோஷல், மற்றும் ஜெயராம் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட புகழ்பெற்ற பாடகர்களின் பங்களிப்பும் இடம்பெற்றுள்ளன.
இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற படம்
Previous Post

நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்

Next Post

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது !!

Next Post

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது !!

Popular News

  • இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; ‘3.6.9’ அனுபவங்களும் அடுத்தக் கட்ட பிரம்மாண்டமும்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.