• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

by Tamil2daynews
July 15, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

 

பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் – ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் – தனித்துவமான இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணியில் ஒரு மாயாஜால நிகழ்வாக ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ திரைப்படம் உருவாகிறது.

ஷோயிங் பிசினஸ் (Showing Business) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். கார்த்திகேயா, இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய ‘பாகுபலி’ படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸ் (Arka Media Works) நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கியுள்ளார். இந்த கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

புகழ்பெற்ற தயாரிப்பாளர்களான ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோர் விறுவிறுப்பான மற்றும் சிறப்பான கதை கொண்ட இப்படத்தை தயாரிக்க, எஸ். எஸ். கார்த்திகேயாவுடன் இணைந்துள்ளனர்.

நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, இப்படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட பிரம்மாண்டமான விழாவில், பொழுதுபோக்கு மற்றும் ஆர்வத்தை தூண்டும் வகையிலான இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
Imageஒரு சிறுமிக்கு ஃபஹத் பாசில் மேஜிக் செய்து காட்டுவதுடன் டீசர் தொடங்குகிறது. அவர்களுக்கு இடையேயான மகிழ்ச்சியான தருணங்களும், அன்பான பிணைப்பும் டீசரின் முக்கிய சிறப்பம்சங்களாகும். பின்னர் அந்த சிறுமியை மேஜிக்கால் மறையச் செய்வதன் மூலம் மற்றொரு பெரிய வித்தையை காட்டுவதாக அவர் உறுதி அளிக்கிறார். அப்போதுதான் அவருக்கு உண்மையான சிக்கல் தொடங்குகிறது.

அதன் பிறகு என்ன நடைபெறுகிறது என்பதே படத்தின் மையக்கருவாக அமைகிறது. தனித்துவமான கதைக்களம் மற்றும் மனதிற்கு நெருக்கமான தருணங்களுடன் கூடிய இந்த டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஃபஹத் பாசிலின் திரை இருப்பும், அவரது கலகலப்பான திரை தோற்றமும் டீசருக்கு மிகுந்த ஆற்றலை சேர்க்கின்றன. அந்த அழகான சிறுமியும் தனது வசீகரமான நடிப்பால் முத்திரை பதிக்கிறார். காள பைரவாவின் பின்னணி இசை தனித்துவமாக இருக்கிறது. மேலும் ஒளிப்பதிவும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ ஒரு சிறந்த கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திரைப்படம் எதிர்வரும் 2026 செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Previous Post

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

Next Post

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Next Post

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Popular News

  • “என்ன விலை’ திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை அணுகிய விதத்தை நீதிமன்றத்திற்கு நேரில் சென்ற அனுபவம் முழுமையாக மாற்றியது” – நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 15, 2026

நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

July 15, 2026

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

July 15, 2026

மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனலின் அடுத்த படைப்பு – ‘ஆண்ட’

July 15, 2026

ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து

July 15, 2026

ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா

July 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.