• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!

by Tamil2daynews
July 20, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!

 

சென்னை, ஜூலை 2026: ஜியோஹாட்ஸ்டார் தமிழின் ரியாலிட்டி காதல் நிகழ்ச்சியான ‘செகண்ட் லவ்’, முதல் வார வெளியீட்டுக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து, பார்வையாளர்களுக்காக புதிய வெளியீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும், அந்த வாரத்திற்கான அனைத்து 7 எபிசோடுகளும் ஒரே நேரத்தில் வெளியாகும். இதன் மூலம், காதல், உணர்வுகள், உறவுகள் மற்றும் வில்லா வாழ்க்கையில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களை ரசிகர்கள் தங்களது வசதிக்கேற்ப தொடர்ச்சியாக கண்டு ரசிக்கலாம்.

மனதைத் தொடும் கதை சொல்லல், இயல்பான உணர்வுகள் என ‘செகண்ட் லவ்’ கான்செப்ட் முதல் வாரத்திலேயே ரசிகர்களை ஈர்த்துள்ளது. மனம் திறந்த உரையாடல்கள், எதிர்பாராத காதல் தொடக்கங்கள், மற்றும் மனதை உருக்கும் தருணங்கள் என காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலைத் தேடும் பயணத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தி இந்த நிகழ்ச்சி தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து, பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றும் வகையில் இந்த புதிய வெளியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் ஒரு எபிசோடிற்காக காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் முழு வாரத்தின் எபிசோடுகளையும் ஒரே அமர்வில் பார்த்து ரசிக்கலாம். வலுவடையும் உறவுகள், ஆழமடையும் உணர்வுகள் மற்றும் ஒவ்வொரு வாரமும் காத்திருக்கும் புதிய திருப்பங்களுடன், ‘செகண்ட் லவ்’ வரும் வாரங்களில் இன்னும் விறுவிறுப்பான காதல் பயணத்தை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது.

‘செகண்ட் லவ்’ தொடர்பான மேலும் பல சுவாரஸ்யமான அப்டேட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் தமிழ் சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

பனிஜே ஆசியா புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ‘செகண்ட் லவ்’ தமிழில் ஒளிபரப்பாகிறது.

ஜியோஹாட்ஸ்டார் பற்றி:
ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Previous Post

நடிகர் கிஷன் தாஸ் நடிக்கும் ‘சி யூ- See U’ படத்தின் First Sight – முதல் பார்வை வெளியீடு

Next Post

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடலை வெளியிட்ட டி-சீரிஸ்! (T Series)

Next Post

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடலை வெளியிட்ட டி-சீரிஸ்! (T Series)

Popular News

  • ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.