• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

by Tamil2daynews
October 23, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

 

இணையத்தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் தனது இயல்பான தோற்றத்தாலும் வசீகரமான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஏகன். இந்நிலையில், யுவராஜ் சின்னசாமி எழுத்து இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள ’ஹைக்கூ’ திரைப்படம் உலகம் முழுவதும் அக்டோபர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தில் கல்லூரி மாணவனாக இருந்து, முதிர்ச்சியடைந்த குடும்பத் தலைவனாக மாறும் ஒரு கதாபாத்திரத்தில் ஏகன் நடித்துள்ளார். கல்லூரிப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், இளமைத் துடிப்பு மிக்க காதல், நகைச்சுவை ஆகியவற்றுடன் கதாபாத்திரங்களின் மாறிவரும் கண்ணோட்டங்கள் மற்றும் உறவுகளையும் மையப்படுத்தி பேசியுள்ளது.இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஏகன் பகிர்ந்து கொண்டதாவது, “எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும் திரைப்படமாக ‘ஹைக்கூ’ இருக்கும் என்று நம்புகிறேன். கல்லூரி மாணவனாக இருக்கும் எனது கதாபாத்திரம், முதிர்ச்சியடைந்த குடும்பத் தலைவனாக மாறுவதைத் திரையில் கொண்டு வருவது எனக்கு சவாலாக இருந்தது. ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் இருவரும் அற்புதமான நடிகைகள். இப்படத்தில் பல உணர்வுப்பூர்வமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இருவரும் அந்தக் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.

சித்து குமாரின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தின் பல உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு அவரது இசை மேலும் பலம் சேர்த்துள்ளது. நகைச்சுவை மற்றும் காதலைத் தாண்டி, ‘ஹைக்கூ’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான பல விஷயங்கள் உள்ளன. அதனுடன் ரசிகர்கள் நிச்சயம் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோரின் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் ‘ஹைக்கூ’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அதிர்ச்சி அருண், சுப்பிரமணியன் சேது, அதியமான், மைம் கோபி மற்றும் இந்துமதி மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சித்து குமாரின் இசையில் உருவான பாடல்கள், ஏற்கெனவே ஆடியோ தரவரிசையில் முன்னணி இடங்களைப் பிடித்துள்ளன. பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார்.

‘ஹைக்கூ’ திரைப்படம் அக்டோபர் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சக்திவேலன் பி, இப்படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

Previous Post

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

Next Post

418 – விமர்சனம்

Next Post

418 - விமர்சனம்

Popular News

  • துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ (AOT) – குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் அழகான திரைப்படமாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை சமந்தா ரூத் பிரபு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி ஒரு ஜென்டில்மேன்.அவருடன் நடித்தது மறக்க முடியாதது: வியக்கிறார் நடிகை சாய் ரோகிணி!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

    0 shares
    Share 0 Tweet 0
  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.