• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் (VEGULI) நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

by Tamil2daynews
November 8, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் (VEGULI) நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

ஒரே ஷாட்டில் ‘அகடம்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இயக்குநர் இசாக், பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரி நடிப்பில் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர். தற்போது மஸ்காரா, மக்காயலா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் பிரியன் நடிப்பில் ‘வெகுளி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘வெகுளி’ (VEGULI) திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை, மிரட்டலான புதிய போஸ்டர் மூலம் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பாடலாசிரியர் பிரியன் நடித்த ‘அரணம்’ திரைப்படத்தைத் தயாரித்த தமிழ்த் திரைக்கூடம் நிறுவனம் இப்படத்தையும் தயாரித்துள்ளது. வேதா பிலிம்ஸ் சார்பில் விஜயா சரவணன் (VIJAYA SHARAVANAN) இணை தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் இசாக் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் திவ்யா சந்திரன், பாய்ஸ் மணிகண்டன், ஷர்மிளா, பூவையார், டேனி, சாப்ளின் பாலு, இமான் அண்ணாச்சி, ஈரோடு சரவணன், சேரன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு நாகார்ஜுன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இலங்கையில் தேசிய விருது பெற்ற ஷமீல் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை தேவராஜ் கவனிக்க, கலை இயக்குநராக நட்ராஜ் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் இந்தியாவையே உலுக்கிய கொடூரமான சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத வகையில் புதுமையான திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் பாராட்டியதுடன், வெறும் 13 நொடிகள் மட்டுமே வெட்டப்பட்டு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பாய்ஸ் மணிகண்டன் முதல்முறையாக இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சாப்ளின் பாலு இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இமான் அண்ணாச்சி முதன்முறையாக இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூவையார் கதையின் திருப்புமுனையாக அமையும் கதாபாத்திரத்திலும், டேனி காவல்துறையிடம் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களும் டீசரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், இப்படத்தைப் பார்த்த திரையுலகப் பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

வித்தியாசமான கதைக்களம், திரைக்கதை மற்றும் வசனங்களுடன் இப்படத்தை உருவாக்கியுள்ள இயக்குநர் இசாக், ‘வெகுளி’ திரைப்படம் நிச்சயம் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்தி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.

பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘வெகுளி’ திரைப்படம், நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Previous Post

பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

Next Post

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படப்பிடிப்பு அவருடைய பிறந்தநாளில் தொடங்கியது!

Next Post

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படப்பிடிப்பு அவருடைய பிறந்தநாளில் தொடங்கியது!

Popular News

  • ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • 200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.