• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ராமாயணா – விமர்சனம்

by Tamil2daynews
November 8, 2026
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ராமாயணா – விமர்சனம் 

 

இந்திய சினிமாவிலேயே பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு இந்த ராமாயணா பெரு முயற்சிக்குப் பிறகு ரிலீசாகி இருக்கின்றது தீபாவளி திருநாளில்.

ராமாயணம் பல வெர்சனில் பல காலங்களில் நாம் பார்த்து இருப்போம், தற்போது இந்த காலத்திற்கு ஏற்றவாறு விஷ்வல் விருந்தை பொருத்தி எடுத்துள்ளனர். இந்த கதை இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லோருக்கும் தெரிந்த கதை தான், இதில் நாங்கள் சொல்ல புதிதாக ஏதுமில்லை.

ராமர் முடிசூடும் நேரத்தில் கைகேயி தன் மகன் பரதனுக்கு நாடு வேண்டும் ராமர் வனவாசம் செல்ல வேண்டும் என்று கோரிக்கையை வைக்க, அப்பாவின் கோரிக்கையை தட்ட முடியாமல் ராமர், சீதை, லக்‌ஷ்மணன் ஆகியோர் வனவாசம் செல்கின்றனர்.

அப்படி அவர்கள் சென்ற இடத்தில் ராமர் மீது ராவணன் தங்கை சூர்பனகை ஆசைக்கொள்ள,  அண்ணனிடமே இப்படி பேசியதால், லக்‌ஷ்மணனோ சூர்பனகை மூக்கை வெட்டுகிறார், இதனால் கோபமான சூர்பனகை தன் அண்ணன் ராவணனிடம் சொல்ல, ராவணன் கோபம் கொண்டு ராமரை வீழ்த்த வந்த இடத்தில் தனியாக இருக்கும் சீதையை  கடத்தி செல்கிறார்.

இதன் பின் ராமர் ராவணன் நாட்டுக்கே சென்று எப்படி சீதையை மீட்கிறார், இந்த பயணத்தில் அவருக்கு என்ன தடைகள் வந்தது, யார் யார் எல்லாம் உதவினார்கள் என்பதே இதன் கதை, இதை இந்த காலக்கட்டத்தில் எப்படி எடுத்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
Ramayana: Rise of a Legend' Review: Royal Intrigue - The New York Times

படத்தின் களம் ராவணன் யஷ்-இடமிருந்தே தொடங்குகிறது, அசுரர் குலம் செழிக்க அவர் இருக்கும் தவம் அதை தொடர்ந்து அவரின் தவத்திற்கு, கிடைக்கும் வரம் அதை வைத்து ஒட்டு மொத்த அசுரர் குலத்தையும் தலை நிமிர வைத்த உலகையே தன் கட்டுபாட்டில் கொண்டு வர யஷ் அனைவரையும் அடித்து தும்சம் செய்வது என யஷ் ஒன் மேன் ஷோ தான், டாக்சிக்-ல் விட்டதை இதில் பிடித்துவிட்டார்.

பிறகு ராமராக ரன்பீர் அத்தனை கச்சிதம், எந்த ஒரு இடத்திலும் தன் கதாபாத்திரம் மீறி சின்ன ரியாக்ஸன் கூட எல்லை மீறாமல் மிக அளவான நடிப்பில் கவர்ந்துள்ளார், சீதையாக சாய் பல்லவியும் சிறப்பான தேர்வு. இப்படத்தின் கதை நாம் செவி வழியாகவும், சீரியல், சினிமா என பலமுறை பார்த்தது,

அதில் இந்த ராமாயணம் எந்த விதத்தில் வித்தியாசமும் இல்லை, ஆனால் நாம் பார்த்த வெர்ஷனை விட இதில் பிரமாண்டமும் விஷ்வல் ஆக காட்சிகளும் நம்மை பிரமிக்க வைக்கிறது.

அதிலும் குறிப்பாக முதல் பாதியில் ராவணன், இந்திரன் சண்டை காட்சி, ராமர் அரக்கர், அரக்கியுடன் சண்டை போடுவது இதெல்லாம் விட இரண்டாம் பாதியில் வரும் சடாயு ராவணன் சண்டைகாட்சி பிரமாண்டத்தின் உச்சம், செம விருந்து.

அதே நேரத்தில் முதல் பாதி சில இடங்களில் பொறுமையாக சென்றாலும் நமக்கு எங்கும் சோர்வை தரவில்லை, இந்த மேஜிக் ராமர் வனவாசம் சென்றதும் கொஞ்சம் சோர்வை தர ஆரம்பித்துவிட்டது.
Ramayana: Part 1 Review: Ranbir Kapoor, Sai Pallavi and Yash Shine in Nitesh Tiwari's Epic | Mathrubhumi English

நிறைய பேண்டசி விஷயங்கள் வந்தாலும் முதல் பாதி-யில் இருந்த எமோஷ்னல் கனேக்ட் மிஸ் ஆகிறது. கிளைமேக்ஸ் சடாயு சண்டைக்காட்சியே மிகச்சிறப்பு, படத்தில் கண்டிப்பாக பாராட்ட வேண்டிய விஷயம் டப்பிங் தான். மிகச்சிறப்பாக டப்பிங் அதிலும் லிப்-சிங்க் அத்தனை நேர்த்தியாக செய்துள்ளனர்.

மேலும் இதை இரண்டு பாகமாக எடுத்துள்ளனர், அதனால் எல்லோரும் எதிர்பார்க்கும் ஹனுமான் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் தான் வருகிறது. டெக்னிக்கலாக கண்டிப்பாக எல்ல விதத்திலும் டாப் நாச் தான், ஆனால், இசை ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என  தோன்றுகிறது.

நடித்த அத்தனை நடிகர் நடிகைகளின் ஒத்துழைப்பும் அவர்களது நடிப்பில் தனி தெளிவாக தெரிகிறது கிராபிக்ஸ் காட்சிகளும் சண்டை காட்சிகளும் படம் பார்ப்பவர்களை மிரள வைக்கும்.

ஆரம்பத்தில் சுமாராக கதை நகர்ந்தாலும் இன்றைய தலைமுறைக்கு கதையை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் இயக்குனருக்கு இருப்பதால் மெல்ல மெல்ல கதை நகர நகர படும் சூடுபிடிக்கின்றது.

மொத்தத்தில் இந்த ராமாயணா இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்
Previous Post

சீன் – விமர்சனம்

Next Post

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

Next Post

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

Popular News

  • ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • 200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.