சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இதயப்பூர்வ வாழ்த்துகளுடன் உருவாகும் சத்ய ஜோதி பிலிம்ஸ் “லெனின் பாண்டியன்”!
சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு. டி. ஜி. தியாகராஜன் வழங்க, தயாரிப்பாளர்களாக திரு. செந்தில் தியாகராஜன், திரு. அர்ஜுன் தியாகராஜன் மற்றும் திரு. சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து தயாரிக்க அனைவரும் எதிர்பார்க்கும் புதிய படைப்பாக “லெனின் பாண்டியன்” (Lenin Pandiyan) தற்போது உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார்.
“லெனின் பாண்டியன்” திரைப்படத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இதில் தமிழ் திரைப்பட உலகின் பன்முக திறமையாளராக திகழும் கங்கை அமரன் நடித்துள்ளார். மேலும், நடிகை மற்றும் அரசியல்வாதியான ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழ் திரையுலகில் திரும்பி வருகிறார். இவர்களுடன் தர்ஷன் கணேசன், ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.









