• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தேர்தல் சூழலை பிரதிபலிக்கும் ஆக்ரோஷ பாடல்!

by Tamil2daynews
April 7, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தேர்தல் சூழலை பிரதிபலிக்கும் ஆக்ரோஷ பாடல்!

 

நடிகர் ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படமான “சட்டென்று மாறுது வானிலை” படக்குழு ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக, பாரதியார் வரிகளில், மூன்றாவது சிங்கிள் பாடலை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளது. சமூக அக்கறை மற்றும் அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ள இந்தப் பாடல் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பாரதியாரின் புகழ்பெற்ற வரிகளான “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற பாடல் வரிகளை அடிப்படையாகக் கொண்டு, இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மதுரை ராப் இசைக்குழு மதுரை சோல்ட்ஜர்ஸுடன் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார். சமூக அவலங்களையும், தற்போதைய நிலைமைகளையும் ஆவேசமாக வெளிப்படுத்தும் இந்தப் பாடலை கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் மதுரை சோல்ட்ஜர்ஸ் இணைந்து பாடியுள்ளனர். தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், சமூக விழிப்புணர்வை தூண்டும் விதமாக இந்தப் பாடல் உருவாகியிருப்பது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BV Production நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய்  தயாரித்து இயக்கும் இப்படம், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாக பேசும்,  புதுமையான ரொமான்டிக் திரில்லராக புதிய முயற்சியாக உருவாகியுள்ளது. நாயகனாக ஜெய் நடித்துள்ள இப்படத்தில், நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, கருடா ராம், ஶ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமூகத்தின் கடுமையான உண்மைகளை பிரதிபலிப்பதாக பாராட்டப்பட்டன. மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக பேசவுள்ளது.

இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவை ரிச்சர்ட் M நாதன் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட்சன், கலை இயக்கம் S கண்ணன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளனர்.

முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிறகு வரும் மே மாதத்தில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

https://youtu.be/XYS6TD2AgdY?si=UTbMlMhR2Fls42aJ

Previous Post

“அறிவு” படக்குழுவின் மனிதநேயம் – பள்ளியை மாற்றிய தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் !

Next Post

“TN 2026” தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Next Post

“TN 2026” தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Popular News

  • “வைஃப்” (Wife) திரைப்படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • “TN 2026” தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ள ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் கோடை காலத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் வெற்றி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

துரந்தர் பழிவாங்கல் சாதனை: இந்தியாவில் ரூ.1,000 கோடி நெட் வசூலை தாண்டியது!

April 10, 2026

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!

April 10, 2026

முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!

April 10, 2026

“ராக்கா” – அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர் !!

April 10, 2026

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.

April 10, 2026

‘2M சினிமாஸ்’ தயாரிப்பில் உருவாகும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!!

April 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.