நீ Forever – விமர்சனம்
புகழ் & ஈடன் தயாரிப்பில் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில் சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, YG மகேந்திரன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் நீ Forever.
கதை
கதாநாயகன்(சுதர்சன் கோவிந்த்) அமமா காதலனுடன்(நிழல்கள் ரவி) ஓடி வாழ்க்கையில் பொருளாதாரத்தில் தோற்று கணவனுடன் வாழ முடியாமல் அப்பா YG மகேந்திரனிடம் வருகிறார். அவரும் மன்னித்து ஏற்றுக்கொள்கிறார் தன் இஷடப்படிதான் வாழவேண்டும் என்ற கண்டிஷனுடன். மகளின் குழந்தையை
YG மகேந்திரனால் மிகவும் கண்டிப்புடன் வளர்க்கப்படுகிறார். ஹீரோ சுதர்சன் கோவிந்த். ஒருபெரிய App டெவலப்பராக முயற்சிக்கிறார். காதல் சார்ந்து App ரெடி செய்கிறார். அது வொர்க் ஆகவில்லை. காரணம் அவருக்கு காதல் அனுபவம் இல்லை என்பதால். இன்னொருபுறம் ஹீரோயின் அர்ச்சனா ரவி இயக்குநராக முயற்சிக்கிறார். அவருக்கு “காதல் கதை கொண்டு வாருங்கள் படம் பண்ணலாம்” என்ற ஆபர் வருகிறது. இந்த சூழ்நிலையில் ஹீரோவும் ஹீரோயினியும் டேட்டிங் ஆப் மூலம் சந்தித்து பழகுகின்றனர். பொய்யாக காதல் செய்து காதல் கதைரெடி செய்கிறார் காதாநாயகி அர்ச்சனா ரவி. உண்மையாக காதலிக்கிறார் காதாநாயகன் சுதர்சன் கோவிந்த். இவர்கள் இருவரும் முடிவில் ஒன்று சேர்ந்தார்களா? அவரவர்கள் ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை
சுதர்சன் கோவிந்த் கதாநாயகனாக சிறப்பாக நடித்துள்ளார். அர்ச்சனா ரவி கொடுத்த கதாபாத்திரத்தைசிறப்பாக செய்துள்ளார். கண்டிப்பான தாத்தாவாக YG மகேந்திரன் சிறப்பாக நடித்துள்ளார்.பிரது, நோபி ஜேம்ஸ், வித்யா, நிழல்கள் ரவி ரேதிகா சீனிவாஸ் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.அஸ்வின் ஹேம்நாத் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.ராஜா பட்டாசார்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
காதலை கேட்டோ பார்த்தோ உணர முடியாது அதை அனுபவித்தே உணர முடியும் என்பதை சுவாராஸ்யமாக எல்லோரும் பார்த்து ரசிக்கும்படி வெற்றிபடமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் அசோக்குமார் கலைவாணி. பாராட்டுக்கள்.








