• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

முத்து என்கிற – காட்டான் விமர்சனம்

by Tamil2daynews
March 29, 2026
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
முத்து என்கிற – காட்டான் விமர்சனம்

தரமான படைப்புகளைக் கொடுக்கும் இயக்குநர் எம். மணிகண்டன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூட்டணியில் ஆண்டவன் கட்டளை மற்றும் கடைசி விவசாயி ஆகிய படங்களுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான்  முத்து என்கிற காட்டான்  . இது கிரைம் மற்றும் ஆக்‌ஷன் கலந்த மிஸ்டரி திரில்லர் ஆகும்.

ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு பாறையின் மீது வெட்டப்பட்ட ஒரு தலை (விஜய் சேதுபதியின் தலை) மர்மமான முறையில் வைக்கப்பட்டிருக்கிறது. உடலைக் காணவில்லை. அந்தத் தலையைச் சுற்றி நிறைய பணமும் சிதறிக் கிடக்கிறது. அந்த முண்டம் எங்கே? அவரை கொன்றது யார்? என்ற கேள்விகளுடன் கதை தொடங்குகிறது.Muthu Alias Kaattaan Review: Vijay Sethupathi-Starrer Is A Slow Burner - 3 Starsமுத்து என்கிற காட்டான் யார்? அவர் ஒரு கொலைகாரனா, அல்லது பாதிக்கப்பட்டவனா? சிலருக்கு அவர் ஒரு ரட்சகன், சிலருக்கு அவர் ஒரு கொடூர மிருகம் எனப் பல பரிமாணங்களில் அவரைப் பற்றி மக்கள் பேசுகிறார்கள். இந்த முரண்பட்ட கதைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையை கிராமத்து காவல் துறையினரும், மற்றவர்களும் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதே ‘முத்து என்கிற காட்டான்’ தொடரின் கதைக்களம்.

எப்போதுமே வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் விஜய் சேதுபதி, இதில் காட்டான் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். ஒரு கட்டுக்கதையாகவும், உண்மையாகவும் வலம் வரும் அவரது கதாபாத்திரம் தொடருக்கு மிகப் பெரிய பலம். ஒரு பழிவாங்கும் கதையை வெறும் ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷனாக மட்டும் காட்டாமல், கிராமத்து பின்னணியில் மனித இயல்புகள் குறித்த தத்துவார்த்தமான சிந்தனைகளுடன் மிக நேர்த்தியாகக் கொடுத்துள்ளார்.
Muthu Engira Kaattaan Review: Enigma Alias Convolution

கதையின் மர்மம் பார்வையாளர்களைத் தொடர்ந்து அடுத்த எபிசோடை பார்க்கத் தூண்டுகிறது. ஒளிப்பதிவும், மண் சார்ந்த பின்னணி இசையும் கதையின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்கின்றன. மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், மற்றும் கிராமத்து மனிதர்களாக வரும் பல நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். செயற்கைத்தனம் இல்லாத வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம்.

இது ஒரு மெதுவாக நகரும்  சீரிஸ் என்பதால், ஆரம்பம் முதலே அதிரடியான ஆக்‌ஷனை எதிர்பார்ப்பவர்களுக்குச் சில இடங்களில் சோர்வை ஏற்படுத்தலாம்.10 எபிசோடுகள் என்பதால் கதையை விவரிப்பதில் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்.

‘முத்து என்கிற காட்டான்’ வெறும் பழிவாங்கும் கதை மட்டுமல்ல; அது மனித வாழ்வின் நோக்கத்தையும், குற்றத்தின் பின்னணியையும் அலசும் ஒரு அழுத்தமான படைப்பு. வழக்கமான சீரிஸ்களில் இருந்து மாறுபட்டு, சற்று நிதானமான ஆனால் ஆழமான கிரைம் மிஸ்டரி தொடரைப் பார்க்க நினைப்பவர்களுக்கு, இது ஒரு மிகச் சிறந்த சாய்ஸ்!

பார்க்க பார்க்க அடுத்த எபிசோடை பார்க்கணும் என்ற ஆர்வம் தூண்டுகிறது 
Previous Post

இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!

Next Post

சாத்தான் தி டார்க்’ – விமர்சனம்

Next Post

சாத்தான் தி டார்க்’ – விமர்சனம்

Popular News

  • முத்து என்கிற – காட்டான் விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சாத்தான் தி டார்க்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமா தற்போது பல சவால்களை சந்தித்தாலும், நல்ல படங்கள் வந்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள் மரகதமலை இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேச்சு !!!

    0 shares
    Share 0 Tweet 0
  • மதுரை அடங்காத காளையாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் “செவல காள”.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு

March 29, 2026

சாத்தான் தி டார்க்’ – விமர்சனம்

March 29, 2026

முத்து என்கிற – காட்டான் விமர்சனம்

March 29, 2026

இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!

March 29, 2026

ஒரே வாரத்தில் ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்த துரந்தர் பழிவாங்கல்!

March 29, 2026
நீ  Forever – விமர்சனம்

நீ Forever – விமர்சனம்

March 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.