• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் ‘யூத்- Youth ‘ படத்தின் முன்னோட்டம்

by Tamil2daynews
March 9, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் ‘யூத்- Youth ‘ படத்தின் முன்னோட்டம்

 

பாடகர் – இசைக்கலைஞர் – நடிகர் – என பன்முக ஆளுமை திறன் படைத்த கென் கருணாஸ் கதையின் நாயகனாகவும் இயக்குனராகவும் அறிமுகமாகும் ‘யூத் – Youth’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்TR அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யூத் – Youth’ திரைப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு ,தேவதர்ஷினி , அனிஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்யான்ஷி யாதவ் ஆகியோருடன் நடிகை நளினி சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் ரீ என்ட்ரி ஆகி இருக்கிறார். இவர்களுடன் சின்னத் தமிழா – தாஜ் மோலா – கெட்டவன் மணிகண்டன் – சுரேன் வின்சென்ட் உள்ளிட்ட டிஜிட்டல் திரை பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களின் களங்கமற்ற சந்தோசம் கொண்ட வாழ்வியல் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம் – சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன்.. படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், மார்ச் மாதம் 19 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.  இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் பார்வையாளர்களின் மனதில் பசுமையாய் பதிந்த பள்ளிக்கூட நாட்களை நினைவு படுத்துவதால் .. இதற்கு அதிக அளவில் வரவேற்பு  கிடைத்திருக்கிறது.
Previous Post

தமிழ் சினிமா தற்போது பல சவால்களை சந்தித்தாலும், நல்ல படங்கள் வந்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள் மரகதமலை இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேச்சு !!!

Next Post

பெண்கள் தினத்தில் “பேட்ரியாட்”( Patriot) படத்திலிருந்து, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சிறப்பு கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டது!!

Next Post

பெண்கள் தினத்தில் “பேட்ரியாட்”( Patriot) படத்திலிருந்து, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சிறப்பு கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டது!!

Popular News

  • முத்து என்கிற – காட்டான் விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரம்மாண்டமாக நடைபெற்ற “யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லக்கி’ திரைப்படம் Hotstar Specials-ஆக, JioHotstar தளத்தில் பிப்ரவரி 20 அன்று வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • மெல்லிசை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு

March 29, 2026

சாத்தான் தி டார்க்’ – விமர்சனம்

March 29, 2026

முத்து என்கிற – காட்டான் விமர்சனம்

March 29, 2026

இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!

March 29, 2026

ஒரே வாரத்தில் ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்த துரந்தர் பழிவாங்கல்!

March 29, 2026
நீ  Forever – விமர்சனம்

நீ Forever – விமர்சனம்

March 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.