



கணவனின் தில்லு முல்லு தாங்க முடியாத காரணத்தால் அவனை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்கிறாள் . ஒருவன் அவளை திருமணம் செய்து கொள்ள முன்வருகிறான். திருமணநாள் அன்று மாஜி கணவன் குறுக்கிட்டால் திருமணம் தடைப்படுகிறது.
தடைப்பட்ட திருமணம் மீண்டும் நடைப்பெற்றதா என்ற பிண்ணனியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள் சமூக சிந்தனையுள்ள விழிப்புணர்வு படம் டாம் தூம் கல்யாணம் எனப் பாராட்டி ”யூ” சான்றிதழ் அளித்துள்ளனர்.
ஷீரி சாந்தா துர்க்கை அம்மன் மூவிஸ் சார்ப்பில் டாம் தூம் கல்யாணம் தயாரித்துள்ள டாக்டர். அ ஷீரி மோகன்ராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ளனர். இவருடன் ஷீரி நிஷா , மகேஷ், ராஜேந்திரன், லட்சுமணன் நடித்துள்ளனர்.
கதை,திரைகதை, வசனம், இயக்கம் மாடசாமி. இசை ருத்தராயன், பாடல்கள் தஞ்சை டாக்டர்.சந்திரமோகன் ஒளிப்பதிவு விஜய் குமார் , நடனம் சாய் சரவணன், இணை தயாரிப்பு விஜய லட்சுமி









