’மெகா ஸ்டார்’ மம்மூட்டி – இயக்குநர் காலித் ரஹ்மான் – தயாரிப்பாளர் ஷெரீஃப் முஹம்மதுவின் க்யூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட் கூட்டணி இணையும் பிரம்மாண்ட பட்ஜெட் படம்
க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் ஒரு புத்தம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ‘மெகாஸ்டார்’ மம்மூட்டி நடிக்கிறார், இந்த திரைப்படத்தை இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்குகிறார். அத்துடன் அகில இந்திய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த ‘மார்கோ’ மற்றும் தற்போது படப்பிடிப்பில் இருக்கும் ‘காட்டாளன் ‘ ஆகிய படங்களைத் தொடர்ந்து க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படமாகும்.
நியூக்- சுஹாஸ் – ஷர்ஃபு ஆகியோரின் எழுத்தில் தயாராகும் இந்தப் படம், நடிகர் மற்றும் ஒரு பிம்பமாகத் திகழும் ‘மெகா ஸ்டார் ‘ மம்மூட்டிக்கு ஒரு சமர்ப்பணமாக உருவாக்கப்படுகிறது. ‘மெகா ஸ்டார் ‘ மம்மூட்டி – ஒவ்வொரு முறையும் தனது அற்புதமான சினிமா மாற்றங்கள் மூலம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும்போது, அவர் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறார். அத்துடன் அவர் புதிய தலைமுறையின் மிகவும் நம்பிக்கைக்குரிய திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான காலித் ரஹ்மானுடன் இணைந்திருப்பது ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்புகளை பெருமளவில் அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் மலையாளத் திரையுலகம் மற்றும் பிற திரையுலகங்களைச்சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். இந்த பெரிய பட்ஜெட்டிலான மாஸ் என்டர்டெய்னர் திரைப்படத்தின் படப்பிடிப்பு 2026-ல் தொடங்குகிறது. மேலும் இந்தத் படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இந்தியத் திரையுலகம் முழுவதிலும் இருந்து புகழ்பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த படக்குழுவுடன் இணைகிறார்கள்.
இந்தப் படத்தில் மலையாளத் திரையுலகம் மற்றும் பிற திரையுலகங்களைச்சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். இந்த பெரிய பட்ஜெட்டிலான மாஸ் என்டர்டெய்னர் திரைப்படத்தின் படப்பிடிப்பு 2026-ல் தொடங்குகிறது. மேலும் இந்தத் படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இந்தியத் திரையுலகம் முழுவதிலும் இருந்து புகழ்பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த படக்குழுவுடன் இணைகிறார்கள்.இதனிடையே சூப்பர்ஹிட் படமான ‘உண்டா’ படத்திற்குப் பிறகு மம்மூட்டி-காலித் ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணையும் படமாகும். இது பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘ஆலப்புழா ஜிம்கானா’ படத்திற்குப் பிறகு காலித் ரஹ்மான் இயக்கும் அடுத்த படமும் ஆகும். மேலும் எழுத்தாளர் – கதாசிரியர் நியூக்கின் ‘டிக்கி டகா’ படத்திற்குப் பிறகு அவருடைய எழுத்தில் உருவாகும் படம் இது. பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘மார்கோ’ படத்தின் மூலம் பொழுதுபோக்குத் துறைக்கு புதுமையான யோசனைகளை அறிமுகப்படுத்திய பிறகு, தயாரிப்பாளர் ஷெரீஃப் முஹம்மது க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் இதனை தயாரிக்கிறார். இந்தப் படம் குறித்த விவாதங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக டிரெண்டிங்கில் உள்ளன.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: விஷ்ணு சுகதன்
மக்கள் தொடர்பு: சதீஷ்குமார் ( S2 மீடியா)








