மோகன்லால் – ஷனாயா கபூர்- ரோஷன் மேகா ஆகியோர் நடித்துள்ள ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ எனும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியை நவராத்திரி திருவிழாவின் போது தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள்
ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் மற்றும் ரோஷன் மேகா ஆகியோருடன் மலையாள முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படமாகும். இயக்குநர் நந்தகிஷோர் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை நடைபெறுகிறது.
‘விருஷபா தி வாரியர்ஸ் அரைஸ்’- திரைப்படம் கதை சொல்லல் மற்றும் சினிமாவின் சிறப்பம்சத்தை.. அதன் தரத்தை மறு வரையறை செய்யும் படைப்பாக அமைந்துள்ளது. பட குழுவினர் தரமான உருவாக்கத்தில் சமரசமில்லாமல் முழு ஈடுபாட்டுடன் உழைத்து வருகிறார்கள்.
நந்தகிஷோர் இயக்கத்தில் தயாராகும் ஒரு காவிய ஆக்சன் நிரம்பிய பொழுதுபோக்கு படைப்பிற்காக காத்திருங்கள். இது உங்களை பிரமிக்க வைக்கும். 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ ஒன்றாக இருக்கும். மேலும் இந்த திரைப்படம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் உலகம் முழுவதும் நான்காயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
நவராத்திரி திருவிழாவின் போது ஒரு நல்ல நாளன்று இப்படத்தின் தயாரிப்பாளர்கள்.. ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்கள்.
மோகன்லால், ரோஷன் மேகா, ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் ஆகியோருடன் ஸ்ரீகாந்த் மேகா, ராகினி திரிவேதி, நேகா சக்சேனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘விருஷபா தி வாரியர்ஸ் அரைஸ்’ எனும் திரைப்படம்- பான் இந்தியா அளவிலான காவிய ஆக்சனாகும். இந்தத் திரைப்படம் தலைமுறைகளைக் கடந்த அப்பா மற்றும் மகன் இடையேயான டிராமா, ஆக்சன் எமோஷனல் மற்றும் வி எஃப் எக்ஸ் ஆகியவற்றுடன் அடுத்த ஆண்டிற்கான மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக இருக்கும்.