• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் பிரம்மாண்ட ஆக்சன் படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது !!

by Tamil2daynews
February 16, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் பிரம்மாண்ட ஆக்சன் படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது  !! 

 

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை  நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது.

தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து,  பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இந்த ஆக்சன் படத்தின் அறிவிப்பே, ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் துவக்கப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி, ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வித்தியாசமான களத்தில், தனது முத்திரையுடன் கூடிய பரபரப்பான திரைக்கதையில், இந்திய சினிமாவில் ஒரு புதிய பிரம்மாண்டமாக,  புதுமையான களத்தில், அனைவரும் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.

தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக,  ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் திரை வாழ்வில், மிகப்பிரம்மாண்டமான படமாக இப்படம் இருக்கும். இதுவரை திரையில் தோன்றிராத மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் தென்னிந்தியா முழுக்க, இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட, கன்னட நடிகை ருக்மணி வஸந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில்,  பிரம்மாண்ட படைப்பாக, இப்படத்தைத் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளைக் கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கவுள்ளார்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கிப் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும்  தொழில் நுட்ப கலைஞர்களின் முழு  விவரங்கள் ஒவ்வொன்றாக, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
Previous Post

சமுத்திரக்கனி நடிப்பில் தமிழ் – தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் படம் ‘ராமம் ராகவம்’

Next Post

ஐஐஎப்சி சார்பில் மறைந்த வெற்றி துரைசாமியின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு இயக்குநர் வெற்றிமாறன் ஏற்பாடு செய்திருந்தார்.

Next Post

ஐஐஎப்சி சார்பில் மறைந்த வெற்றி துரைசாமியின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு இயக்குநர் வெற்றிமாறன் ஏற்பாடு செய்திருந்தார்.

Popular News

  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • ’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.