ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘காஃபி வித் காதல்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் பிரீமியரை ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது

by Tamil2daynews
December 7, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘காஃபி வித் காதல்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் பிரீமியரை  ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது
5 டிசம்பர், 2022: இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ‘காபி வித் காதல்’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. குஷ்பு, ஏ.சி.எஸ். அருண்குமார் மற்றும் ஏ.சி.சண்முகம் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு, தமிழில் ரொமான்ஸ் காமெடி திரைப்படமாக உருவான “காபி வித் காதல்” திரைப்படத்தை சுந்தர் சி எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோருடன் மாள்விகா ஷர்மா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா சண்முகநாதன் மற்றும் திவ்யதர்சினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டிசம்பர் 9 ஆம் தேதி டிஜிட்டலில் வெளியாகவுள்ள ரொமான்ஸ் காமெடி திரைப்படமான இந்த ‘காஃபி வித் காதல்’ ஒரு அருமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும்.
ஸ்ரீகாந்த் [மியூசிக் டீச்சர்], ஜீவா [ஐடி] மற்றும் ஜெய் [ பிஸினஸ்மேன்] ஆகிய 3 சகோதரர்களின் வாழ்க்கையைச் சுற்றி அவர்களின் வாழ்கையின் வெவ்வேறு பக்கங்களை  சொல்வதே இப்படம். ஒழுக்கமான ரூல்ஸ் மீறாத பையனாக ஸ்ரீகாந்த், தனது லிவ்-இன் ரிலேஷன்ஷனுக்குப் பிறகு கடும் மனவேதனையைச் சமாளிக்கும் நபராக ஜீவா மற்றும் கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இல்லாத நிலையில் சொந்தத் தொழிலைத் தொடங்க முயற்சிக்கும் ஜெய். இவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கதை. ஒவ்வொரு பார்வையாளர்களும் தங்கள் வாழ்வோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் கதை.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மற்றும் E. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில், உடன்பிறந்த உறவுகளின் கோபத்தையும் அன்பையும் இந்த படம் சித்தரிக்கிறது. இப்போது, ஜீ5 தளத்தில் அதன் உலக டிஜிட்டல் பிரீமியர் மூலம், இப்படம் 190+ நாடுகளில் உள்ள பார்வையாளர்களுக்குக் கிடைக்கும். எனவே, இந்த இதயத்தைத் திருடும்  கதையை டிசம்பர் 9 ஆம் தேதி பார்க்கத் தயாராகுங்கள்.
ஜீ5 தளத்தின் இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், “பார்வையாளர்களை புதிய கதைகள் மூலம் மகிழ்விப்பதே எங்கள் நோக்கம.  ‘காஃபி வித் காதல்’ உலக டிஜிட்டல் பிரீமியர் மூலம், ஒரு அட்டகாசமான ரொமான்ஸ் காமெடி திரைப்படத்தை, பார்வையாளர்களுக்கு வழங்கவுள்ளொம். இன்றைய வேகமான உலகில், நம் அன்புக்குரியவர்களுடன் செலவளிக்கும் நேரம் குறைவாகிவிட்டது. நம் அன்பையும் உறவுகளின் நேசத்தையும் ஞாபகப்படுத்தும் அழகான திரைப்படமாக ‘காஃபி வித் காதல்’ இருக்கும்.
இயக்குநர் சுந்தர் சி கூறுகையில், “காபி வித் காதல்” ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம்.  சில சமயங்களில் நமது பெற்றோர்கள் நமது தனித்திறமைகளை உணரத் தவறிய நேரங்கள் உண்டு, ஆனால் நம் உடன்பிறப்புகள் எப்பொழுதும் நம்மைக் கவனித்து, நம்மைச் சரியாக புரிந்து கொள்வார்கள். காஃபி வித் காதல் என்பது உறவுகளின் கலவையாகும், அன்றாட வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் உடன்பிறப்புகளுடனான மோதல்கள் மற்றும் இனிமையான நினைவுகள் அனைத்தையும் அழகாக சொல்லும் கதை இது. இப்படத்தை காணும் ஒவ்வொருவரும் தங்கள் உடன்பிறப்பை கண்டிப்பாக நினைப்பார்கள். ஜீ5 தளம் இப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி இந்தக் கதையைப் பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்ல, இதை விட சிறந்த தளம்  இருக்க முடியாது.
இதயத்தை கொள்ளை கொள்ளும் அருமையான பொழுதுபோக்குக்கு  ‘காஃபி வித் காதல்’  காண தயாராகுகங்கள்! டிசம்பர் 9 முதல் ஜீ5 தளத்தில் ‘காபி வித் காதல்’ பார்க்க தயாராகுங்கள்!
ஜீ5 பற்றி:
ஜீ5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ஜீ5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது.  பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ஜீ5  வழங்குகிறது.
Previous Post

சினிமாவில் இருப்பதே ஒரு சாதனைதான். கலை இயக்குநர் வீரசமர்!

Next Post

தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் !!

Next Post

தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் !!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார் !

    0 shares
    Share 0 Tweet 0
  • படவாய்ப்பு தருகிறேன் என கூறி என்னை நாசம் செய்த இயக்குனர்கள்! அதையும் சலிக்காமல் செய்தேன்.. டிக்டாக் இலக்கியா பகீர் தகவல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • சனி பகவானை எப்படி வணங்க வேண்டும்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • 15 வருடங்களுக்குப் பிறகு ஊர்வசி – கலாரஞ்சனி சகோதரிகள் இணைந்து நடித்துள்ள ‘யோசி’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாவீரன் பிள்ளை படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி மற்றும் ராதா ரவி முக்கிய கதா படத்தில் நடித்துள்ளார்கள்..

March 23, 2023

பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார் !

March 23, 2023

39 ஆண்டுகளுக்கு பிறகு வைரமுத்து – சித்ரா !

March 23, 2023

தமிழக அரசு செயலால் கார்த்தி மகிழ்ச்சி.

March 23, 2023

‘காசேதான் கடவுளடா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

March 23, 2023

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

March 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!