ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“”அஞ்சல” பட இயக்குனரின் அடுத்த படம்..!

by Tamil2daynews
February 15, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர் சசிகுமார், குடும்பத்தோடு கொண்டாடும், கிராமப்புறம் சார்ந்த திரைப்படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர்களின் இதயங்களை
கொள்ளை கொண்டுள்ளார். சிறந்த பொழுதுபோக்கை தரும் இந்த வகை திரைப்படங்கள், எப்போதும்  வர்த்தக வட்டாரங்களிலும்
லாபத்தை பெற்று தந்துவிடுகிறது. இயற்கையாகவே, சசிகுமார் இத்தகைய கிராமப்புற கதைகளின் வெற்றி முகத்துக்கு சொந்தக்காரராக மாறிவிட்டார். அத்தகைய படங்களின்  வாயிலாக, பல இயக்குநர்களின் வெற்றிப்பயணத்திற்கு ஒரு படிக்கட்டாகவும் அவர் இருந்துள்ளார்.  ஒரு இயக்குநரின் கதையையும், அவரது திறனையும் மதிப்பிடுவதில் அவர் கில்லாடியாக இருப்பது, தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.  SKLS Galaxy Mall Productions E. மோகன் தயாரிப்பில்
நடிகர் சசிகுமார் நடிக்கும் அடுத்த படமான “புரடக்‌சன் நம்பர்.2” படத்தை இயக்கும் இயக்குநர்  தங்கம் பா சரவணன் இந்த வரிசையில் தற்போது லேட்டஸ்டாக இணைந்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் தங்கம் பா.சரவணன் கூறியதாவது..,
உலகம் முழுக்க அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் படமாக   இப்படம் இருக்கும். இது ஆக்சன், செண்டிமெண்ட் மற்றும் அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்த திரைப்படமாக இருக்கும். இந்த திரைக்கதையை நம்பி, இப்படத்தை படமாக்க சம்மதம் தந்ததற்காக  தயாரிப்பாளர் மோகன் சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.  மேலும் படத்தின் எந்த ஒரு விசயத்திலும் அவர் ஒருபோதும் தலையிடவில்லை, இது என்னைப் போன்ற  வளரும் இயக்குநருக்கு ஒரு வரப்பிரசாதம். சசிகுமார் சார் என்னுடைய முந்தைய படமான ‘அஞ்சல’ படம் பார்த்து, என்னுடைய  முயற்சியை முழுமையாக  பாராட்டினார். அவரின் வாழ்த்துக்கு  நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் இந்த திரைக்கதையை கேட்டபோது, எல்லா தரப்பு ரசிகர்களிடமும் நிச்சயம் இப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் மிகுந்த நம்பிக்கை வைத்தார். சசிகுமார் சாரின் கேரியரில் இது ஒரு  முக்கியமான படமாக இருக்கும். அவரிடமிருந்து ரசிகர்கள்  எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. அதை தாண்டியும், திரைக்கதையில் ஏராளமான ஆச்சர்யங்களும் உள்ளது.  இவையனைத்தும் இணைந்து ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் ஒரு அருமையான படைப்பாக இப்படம் இருக்கும். கடந்த வருட வெற்றித் திரைப்படமான ‘அஞ்சல’  படத்தின் தரமான உள்ளடக்கத்திற்காக விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட இயக்குநர் தங்கம் பா சரவணன், இப்படத்தை எழுதி இயக்குகிறார்.  இப்படத்தை SKLS Galaxy Mall Productions சார்பில் E. மோகன் தயாரிக்கிறார்.தொழில்நுட்பக் குழுவில் சாம் C.S.  (இசை), ராமி (ஒளிப்பதிவு), ஷான் லோகேஷ் (எடிட்டர்), வைரபாலன் (கலை), விக்கி (ஸ்டண்ட் இயக்குனர்), ரமேஷ் (காஸ்ட்யூமர்), தினகரன் (மேக்கப்மேன்), குமரேசன் (ஸ்டில்ஸ்), சந்திரன் ( ஸ்டோரி போர்டு), P. பாலகோபி (எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர்) N. P. கொளஞ்சி  (புராஜக்ட் டிசைனர்) M.முரளிதரன் – (புரடக்சன் கண்ட்ரோலர்) சுரேஷ் சந்திரா & ரேகா D one  (மக்கள் தொடர்பு) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அனன்யா நாகல்லா, கருணாஸ், ராஜ் மோகன், அபிராமி ராகுல் பவணன், G.M. சுந்தர், ஜோ மல்லூரி, தயானந்த் ரெட்டி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
Previous Post

கமல் வழியில் அவரது ரசிகன் ஸ்ரீராம்!

Next Post

‘நிக்குமா நிக்காதா?’ குறும்படம் வெளியீடு

Next Post

'நிக்குமா நிக்காதா?' குறும்படம் வெளியீடு

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • அப்புக்குட்டிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என்கிறார் “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஏ.எல்.ராஜா.

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ டீஸர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • முகேன் ராவ், தேஜு அஷ்வினி நடிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், எஸ் ஜி சி மீடியா தயாரிப்பில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பம் ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’

    0 shares
    Share 0 Tweet 0
  • “MCKINGSTOWN”  Men’s Grooming 5th Outlet Salon launched by Apsara Reddy at Kilpauk

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

March 21, 2023

முகேன் ராவ், தேஜு அஷ்வினி நடிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், எஸ் ஜி சி மீடியா தயாரிப்பில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பம் ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’

March 21, 2023

ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் டிரெய்லர் வெளியீட்டு விழா !

March 21, 2023

‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

March 21, 2023

அப்புக்குட்டிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என்கிறார் “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஏ.எல்.ராஜா.

March 21, 2023
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி  இயக்கம் சார்பில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் சார்பில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி.

March 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!