ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மும்பை மக்களை வியக்க வைத்த ராக்கிங் ஸ்டார் யஷ்

by Tamil2daynews
April 15, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மும்பை மக்களை வியக்க வைத்த ராக்கிங் ஸ்டார் யஷ்

 

 

ராக்கிங் ஸ்டார் யஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘கே ஜி எஃப் 2’ படத்தை காண்பதற்காக ரசிகர்களை திரையரங்குக்கு கவர்ந்திழுக்கும் வகையில் இப்பட நாயகனுக்கு 100 அடி உயரத்திற்கு கட் அவுட் வைத்திருக்கிறார்கள்.
ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் ‘கேஜிஎப் சாப்டர் 2’ படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 14ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த படத்தை தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார்.
இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் இந்தி திரை உலக ரசிகர்களை கவர்வதற்காக குறிப்பாக மும்பை மக்களை கவர்வதற்காக பட குழுவினர் அந்த மாநகரத்தில் அமைந்திருக்கும் கார்னிவல் சினிமாஸ் என்ற திரைப்பட வளாகத்தில்100 அடி உயரத்தில் படத்தின் நாயகனான ராக்கிங் ஸ்டார் யஷ் அவர்களுக்கு பிரமாண்டமான கட் அவுட்டை  வைத்திருக்கிறார்கள். ராக்கிங் ஸ்டார் யஷ்ஷின் பிரம்மாண்டமான கட் அவுட்டை மும்பைவாசிகள் அண்ணாந்து பார்த்து வியக்கிறார்கள். அதனை வீடியோவாகவும், செல்ஃபியாகவும் எடுத்து தங்களது இணையப்பக்கத்திலும், சமூக வலைதளப் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக ‘ராக்கிங் ஸ்டார்’ நடிப்பில் வெளியாகும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ முதல் நாளன்று வசூல் சாதனை படைக்கும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே இந்தி திரை உலகில் முதன் முதலாக நடிகர் ஒருவருக்கு 100 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டிருப்பது சாதனையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post

இயக்குநர் ராம்-நிவின்பாலி படப்பிடிப்பு நிறைவு

Next Post

தந்தை மற்றும் மகனுடன் ஒன்றாக பணியாற்றியது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம்

Next Post

தந்தை மற்றும் மகனுடன் ஒன்றாக பணியாற்றியது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம்

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’! – ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்” அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும் அதிரடியான வரவேற்பை பெற்றுள்ளது !

    0 shares
    Share 0 Tweet 0
  • “ராக்கெட்ரி” விமர்சனம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!

July 6, 2022

பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளித்து கவுரவித்த தளபதி விஜய் மக்கள் இயக்கம்

July 6, 2022

பன்னிக்குட்டி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

July 6, 2022

தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’! – ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது

July 5, 2022

உலக அங்கீகாரத்தின் ஆரம்பத்தில் “இரவின் நிழல்” ..!

July 5, 2022

தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

July 5, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.