யுவன் ஷங்கர் ராஜா – உலகம் சுற்றும் இசை மேதை
யுவன் ஷங்கர் ராஜா மீதும் அவரது இசையின் மீதும் ரசிகர்கள் கொண்டுள்ள அன்பிற்கு எல்லையே இல்லை. மலேசியாவில் நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததே இதற்கு சான்று. மலேசியாவில் இதுபோன்ற ஒரு சாதனை நடப்பது இதுவே முதல் முறை.
திரையுலகில் யுவன் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யுவன்-25 என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்வு கோலாலம்பூரில் உள்ள ஆக்சியாட்டா அரங்க வளாகத்தில் நடத்தப்பட்டது.
இரண்டு நாள் இசை நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பில் மிகவும் மகிழ்ச்சியடைந்த யுவன் சமூக ஊடகம் வாயிலாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அறிவிப்பு வெளியானது முதல், இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியை கண்டும் கேட்டும் களிக்க யுவனின் ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.