• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கம்போடியா உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் நடிகர் விஜய் விஷ்வா !

by Tamil2daynews
December 2, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கம்போடியா உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் நடிகர் விஜய் விஷ்வா !

 

கம்போடியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் 2000 ஆண்டுகாலப் பாரம்பரியத் தொடர்பு உண்டு.வாணிபத் தொடர்பு வழியாகச்  சென்று கலந்த தமிழர்களின் நாகரிகம் பண்பாடு போன்றவற்றின் தாக்கம் கம்போடியாவில் இன்றும் உண்டு.அங்கும் தமிழர்கள் வசிக்கிறார்கள்; தமிழ்க் கலைகளைக் கொண்டாடுகிறார்கள்.அதன் ஓர் அம்சமாக கம்போடியாவின் சியம் ரீப் நகரில் இரண்டாம் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு நடைபெற்றது.

நவம்பர் 21 முதல் 26 வரை நடைபெற்ற மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டார்கள்.
ஜெர்மன் ஹம் நகரில் உள்ள காமாட்சி அம்மன் தலைமை ஆதீனம் சிவ ஸ்ரீ பாஸ்கர குருக்கள்,ஆஸ்திரேலிய எழுச்சிக் கவிஞரும் சிறை அதிகாரியுமான ரவிச்சந்திரன்,ஆசிரியையும் வானொலி ஒலிபரப்பாளருமான சாரதா ரவிச்சந்திரன்,சமூக செயற்பாட்டாளர் நாவலூர் முத்து, தொல் ஆய்வாளர் சுகவனம், புலவர் நந்திவர்மன், டாக்டர் வாசுகி சித்திரசேனன்,அகிலன் ஆகியோருடன்

தமிழ் நடிகர் விஜய்விஷ்வா கலந்து கொண்டார்.

இவ்விழாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டுப் பாடல் வெளியிடப்பட்டது .பாடலை பாடியவர் வேல்முருகன்,கேவி மீடியாஸ் சார்பில் டாக்டர் பி.செந்தில் நாதன் தயாரித்திருந்தார். ஞானம்- சீனு ஒருங்கிணைத்துள்ளனர். ஜி கே வி இசையமைத்துள்ளார். தாமரை வரிகளை எழுதியுள்ளார்.

தனது கம்போடியப் பயண அனுபவம் பற்றி நடிகர் விஜய் விஷ்வா கூறும் போது,

“நான் கம்போடியா சென்று அங்குள்ள மண்ணையும் மக்களையும் பார்க்கும்போது எனக்கு நமது தமிழ் கலாச்சாரத்தின் மீது பிரமிப்பு ஏற்பட்டது. கடல் கடந்து நம் தமிழர்கள் சென்று பரப்பிய பண்பாட்டை அங்கே காண முடிந்தது.

ஒரு சுற்றுலாவாக அங்கோர்வாட்  சென்று அங்குள்ள கோயில்களைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.நமது தமிழ் மன்னர்கள் அமைத்த கோயிலைக் கண்டு ஒரு புறம் பெருமையாகவும் அதன் சிதைவுகளைக் கண்டும் அதன் மீது வேறொரு பண்பாட்டுச் சின்னங்களை நிறுவ முயன்று இருப்பதைப் பார்க்கும்போது வேதனையாகவும் இருந்தது.

கம்போடிய மக்கள் மிகுந்த மரியாதை தருபவர்கள். பொறுமையானவர்கள். அவர்கள் நம்மிடம் பழகும் போது அவர்களது பண்பாட்டை அறிய முடிந்தது.

 கம்போடியாவிலுள்ள தமிழ் சான்றோர்கள் கம்போடிய அரசின் தலைமை அலுவலகத்தில் தமிழ் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில்  திருவள்ளுவர் சிலையை நிறுவி உள்ளனர் .மேலும் கம்போடியப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கவிஞர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தியதில் கம்போடியாவில் இருக்கும் தமிழ் ஆர்வலர்கள் ஞான சேகரன்,சீனிவாச ராவ்,  தாமரை சீனிவாசராவ் ஆகியோர் ஆற்றிய பணி அறிந்து பெருமையாக இருந்தது. அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் வாழ்த்தினாலும் தகும்.

கம்போடிய மண்ணையும் மக்களையும் பார்க்கும்போது நமது மக்களைப் பார்ப்பது போன்ற  உணர்வு வருகிறது.

அந்தக் கவிஞர்கள் மாநாட்டில் மொழி தெரியாவிட்டாலும் கூட நமது மொழியை மதித்து பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாகவும் பொறுப்பாகவும் அமர்ந்திருந்து கண்டு களித்தது மகிழ்ச்சியாக இருந்தது .அது நமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் தரக்கூடிய மரியாதையாகவும் இருந்தது” எனக்கு ஒளிரும் நட்சத்திரம் விருது வழங்க கௌரவித்தனர்,இவ்வாறு விஜய் விஷ்வா கூறினார்.
Previous Post

‘ஃபைட் கிளப்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Next Post

கல்பதரு பிக்சர்ஸ் பி.கே. ராம் மோகன் வழங்கும் இயக்குநர் என்வி நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார்- சரத்குமார் நடித்துள்ள ‘நா நா’ (Na Naa) திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது!

Next Post

கல்பதரு பிக்சர்ஸ் பி.கே. ராம் மோகன் வழங்கும் இயக்குநர் என்வி நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார்- சரத்குமார் நடித்துள்ள 'நா நா' (Na Naa) திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது!

Popular News

  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.