• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம் அறிமுகம்: மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு கிரிக்கெட் வீரர் எப்படியான சவால்களை எதிர்கொள்கிறார் என்பதை சித்தார்த்தின் அர்ஜூன் கதாபாத்திரம் சொல்கிறது!

by Tamil2daynews
March 15, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம் அறிமுகம்: மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு கிரிக்கெட் வீரர் எப்படியான சவால்களை எதிர்கொள்கிறார் என்பதை சித்தார்த்தின் அர்ஜூன் கதாபாத்திரம் சொல்கிறது!

 

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கும் ’டெஸ்ட்’ படத்தில் நடிகர் சித்தார்த்தின் அர்ஜூன் கதாபாத்திர அறிமுக வீடியோவை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் வெளியிட்டுள்ளார்.

சிலருக்கு கிரிக்கெட் ஒரு விளையாட்டு, பலருக்கு அது ஒரு ஆர்வம். ஆனால், அர்ஜுனுக்கு அது வாழ்க்கை! திறமையான நடிகரான சித்தார்த் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  அவரது கிரிக்கெட் வீரர் கதாபாத்திரம் லட்சியம், தியாகம் மற்றும் இடைவிடாத முயற்சி ஆகியவற்றைக் கொண்டது. அர்ஜூன் மைதானத்தில் அடியெடுத்து வைக்கும்போது கிரிக்கெட் பேட்டை மட்டும் எடுத்து செல்லவில்லை. ஒரு நாட்டின் எதிர்பார்ப்புகளையும் தனது சொந்த குடும்பத்தின் நம்பிக்கைகளையும் சுமந்து செல்கிறார். சர்வதேச சுழற்பந்து வீச்சாளரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான ஆர். அஸ்வின், அர்ஜுனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அர்ஜுனுக்கு கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதையும் தாண்டி அது அவனது அடையாளம், குறிக்கோள் மற்றும் அவனது மிகப்பெரிய சவால். ஆனால் அவனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் இடையில் பிரச்சினைகள் வரும்போதுதான் அர்ஜூனுக்கு உண்மையான ‘டெஸ்ட்’ தொடங்குகிறது.
தனது கதாபாத்திரத்தைப் பற்றி சித்தார்த் பேசுகையில், “அர்ஜுனின் கதை முழுக்க முழுக்க ஆர்வம் மற்றும் தியாகத்தைக் கொண்டது. அவன் தனக்காக மட்டும் விளையாடவில்லை. அவன் தனது  நாட்டிற்காகவும், விளையாட்டின் மீது கொண்ட காதலுக்காகவும், அவனது கனவுகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான போராட்டத்தையும் சுமந்துதான் விளையாடுகிறான். ’டெஸ்ட்’ என்பது ஒரு ஸ்போர்ட்ஸ் படம் மட்டுமல்ல. இது நமது தேர்வுகள் பற்றியும் நமக்கே தெளிவுபடுத்துகிறது. இந்தப் படத்தை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் பார்ப்பதற்காக நான் காத்திருக்கிறேன்” என்றார்.

அர்ஜுனின் விளையாட்டு மீதான காதல் அவரது தேர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இதுபற்றி மேலும் அறிய ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ’டெஸ்ட்’ திரைப்படம் பாருங்கள்.

நடிகர்கள்: ஆர். மாதவன், மீரா ஜாஸ்மின், நயன்தாரா, சித்தார்த்

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம்: எஸ். சஷிகாந்த்,
தயாரிப்பாளர்: சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் (YNOT ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்)
நெட்ஃபிலிக்ஸ் பற்றி:

நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

Previous Post

UPBEAT பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ சரண்டர் ‘ திரைப்படம்!

Next Post

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது!

Next Post

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது!

Popular News

  • ‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • Zion Films மற்றும் MRP Entertainment தயாரிப்பில் பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. !!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

October 27, 2026

ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது!

October 27, 2026

நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு

October 27, 2026

நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

October 27, 2026

‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!

October 27, 2026

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.