• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விடாமுயற்சி – விமர்சனம் ரேட்டிங் 3 / 5

by Tamil2daynews
February 6, 2025
in சினிமா செய்திகள்
0
விடாமுயற்சி – விமர்சனம்   ரேட்டிங் 3 / 5
0
SHARES
37
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
விடாமுயற்சி – விமர்சனம்  ரேட்டிங் 3 / 5
துணிவு படத்திற்கு பின் இரு ஆண்டுகள் கழித்து அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம்  திரையரஙகில் வெளியாகியுள்ளது. a

ஹாலிவுட்டில் 1997 ஆம் ஆண்டு வெளியான பிரேக்டவுன் படத்தின் கதையை தழுவி உருவாகியுள்ளது விடாமுயற்சி.

அர்ஜூன்(அஜித்) கயல் (த்ரிஷா)இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.  12 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் தான் இன்னொரு நபரோடு உறவில் இருப்பதாகவும் அர்ஜூனிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் தெரிவிக்கிறார் கயல். கயலை அவள் பெற்றொர் வீட்டில் விட்டுவர போகும் வழியில் அவரை யாரோ கடத்திச் செல்கிறார்கள். எந்த வித தடமும் இல்லாமல் தனது மனைவியை தேடிச் செல்லும் அர்ஜூன் பல போராட்டங்களை எதிர்கொள்கிறார். கயலை கடத்தியது யார். அவளை அர்ஜூன் காப்பாற்றினாரா ? இருவரும் சேர்ந்தார்களா பிரிந்தார்களா என்பதே விடாமுயற்சி படத்தின் கதை.

வழக்கமான எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் படம் தொடங்கியதும் கதை தொடங்கிவிடுகிறது. அஜித்திற்கு என்று தனியாக மாஸான அறிமுக காட்சி ஏதும் இல்லை என்றாலும் சவாதீகா பாடல் ஒரு நல்ல ஓப்பனிங் மூடை செட் செய்கிறது.
What to Expect from Ajith's High-Octane Vidamuyarchi Adventure - Tamil News - IndiaGlitz.com

முதல் அரை மணி நேரத்திற்கு அர்ஜூன் கயல் யார் இவர்கள் எப்படி சந்தித்துக் கொண்டார்கள் , ஏன் பிரிகிறார்கள் என்பதை முன்னும் பின்னுமான காட்சிகளில் சொல்லப்படுகிறது. இடையிடையில் ஆரவ் , ரெஜினா , அர்ஜூன் என அடுத்தடுத்த கதாபாத்திரங்கள் அறிமுகமாகின்றன. ஏற்கனவே படத்தின் கதை தெரிந்தது என்பதால் த்ரிஷா காணாமல் போய் படம் கொஞ்சம் விறுவிறுப்பாக மாற நாம் பொறுமை காக்க வேண்டியிருக்கிறது. மொழி தெரியாத நாட்டில் தனி நபராய் அஜித் தனது மனைவியை தேடி அலையும் காட்சிகள் அடுத்தடுத்து தொடர்கின்றன. நாம் எதிர்பார்த்து காத்திருந்த ட்விஸ்ட் வைத்து இண்டர்வல் ப்ளாக் விடுகிறார்கள்.

முதல் பாதியில் யார் வில்லன் என்கிற கேள்வியோடு தொடரும் கதை இரண்டாம் பாதியில் வில்லன்களின் நோக்கம் என்ன என்பதை மையமாக வைத்து தொடர்கிறதும். இனிமேலாவது படம் கொஞ்சம் சூடு பிடிக்கும் என நம்பி பொறுமை காத்து செகண்ட் ஆஃப் வரை வந்த  ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு கடைசியில் படத்தை முடிக்கிறார்கள்.

ஒரு கணவன் மனைவிக்கு இடையில் ஒரு காலத்தில் அழகான காதல் இருந்தது. அந்த காதல் முடியப்போகும் தருவாயில் எதிர்பாராத ஒரு சம்பவம் அவர்களின் காதலை மீண்டும் உயிர்பிப்பதே விடாமுயற்சி படத்தின் கதை. ஆனால் இதனை திரைக்கதையில் கொண்டு வருவதில் மகிழ் திருமேனி சறுக்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் பாதியில் அஜித் த்ரிஷா இடையிலான காதல் காட்சிகள் அழகாக எழுதப்பட்டிருந்தாலும் ஒட்டுமொத்த படத்துடன் ஆடியன்ஸை ரிலேட் செய்ய போதுமானதாக இல்லை.
Arjun's first look from Ajith's 'Vidamuyarchi' adds anticipation

மேலும் வில்லன் யார் ? அவர்களின் நோக்கம் என்ன என்பது தான் இந்த படத்தில் ஆர்வத்தை தூண்டக்கூடிய அம்சம். அதை முடிந்த அளவிற்கு கடைசி வரை சுவாரஸ்யமாக மெயிண்டெயின் செய்திருந்தால் நிச்சயமாக செம த்ரில்லிங்கான அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் அதையும் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர்.

 அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் , பார் ஓனர் , போலீஸ் , த்ரிஷா என அத்தனை கதாபாத்திரங்கள் படத்தில் இருந்தும் எந்த கதாபாத்திரத்திற்கு வெயிட்டான ஒரு ரோல் கிடையாது. ரெஜினா மற்றும் அர்ஜூனி ஃபிளாஷ்பேக் காட்சிகள் கதைக்கு பொருத்தமே இல்லாததாக உள்ளன.

அஜித்தின் தோற்றம் தொடங்கி குட்டி குட்டி ரியாக்‌ஷன் வரை படம் முழுவதும் ரசிக்கும்படியாக நாடித்துள்ளார். அர்ஜூன் , ரெஜினாவின் நடிப்பும் அபாரம்.

படத்தில் உண்மையாக ஹாலிவுட் தரத்தில் இருந்தது என்றால் அது ஓம்பிரகாஷின் ஒளிப்பது தான். முதல் ஷாட்டில் இருந்தே ஏதோ வெஸ்டர்ன் படம் பார்ப்பது போல் அவ்வளவு கிளாஸ். ஸ்டண்ட் காட்சிகள் மற்றொரு பாராட்டிற்குரிய அம்சம்.

ஆனால்  இந்த மாதிரி லொகேஷன் இந்தியாவிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத்தின் பின்னணி இசை இல்லை என்றால் படம் நம் பொறுமையை உச்சகட்டில் சோதிக்கும்.

ஆரவ் நடிக்க வேண்டிய கதையில் அஜித் நடித்திருக்கிறார்.

மொத்தத்தில் இந்த விடாமுயற்சி
 வீண் முயற்சி.
Tags: Ajith KumarAnirudhArjunMagizh ThirumeniRejina CassandraTrishaVidamuyarchiVidamuyarchi Movie ReviewVidamuyarchi Review
Previous Post

“பேபி & பேபி” திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா !!

Next Post

என் திரையுலக பயணத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான படம் ‘தண்டேல்’

Next Post

என் திரையுலக பயணத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான படம் 'தண்டேல்'

Popular News

  • விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.