• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் ஆர்யா விருந்தினராக கலந்து கொண்ட ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழா

by Tamil2daynews
March 2, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் ஆர்யா விருந்தினராக கலந்து கொண்ட ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழா

 

ஓ எம் ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சி கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இன்றைய இளைய  தலைமுறையினர் தங்களது உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க நேரத்தை ஒதுக்கி வருகிறார்கள். அதிலும் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் இளைய தலைமுறையினர் தாங்கள் பணியாற்றும் அல்லது தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தங்களை உடல் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகளை செய்வதில் பெருவிருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் இருக்கும் ஓஎம்ஆர் சாலையில் சர்வதேச தரத்துடன் கூடிய ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் ஜிம் தொடங்கப்பட்டிருக்கிறது.

இதன் திறப்பு விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர் (பொருளாதார குற்றப்பிரிவு) திரு கே. ஜோஸ் தங்கய்யா, தாம்பரம் மாநகர காவல் துறையின் உதவி ஆணையர் திரு ஆர். ரியாசுதீன், நீலாங்கரை சரக காவல்துறை உதவி ஆணையர் திரு. பரத்,
சென்னை தெற்கு குற்றவியல் குழு காவல் ஆய்வாளர் திரு எஸ். மீனாட்சி சுந்தரம்,உதவி காவல் ஆய்வாளர் திரு. ரஞ்சித்
ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் திரைத்துறையைச் சார்ந்த நட்சத்திர நடிகர்கள் ஆர்யா, ரமேஷ் திலக், அபி ஹாசன், பெசன்ட் நகர் ரவி, நடிகைகள் விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், தீப்தி, ஷெர்லின் சத் ஆகியோரும்,
சின்னத்திரை பிரபலங்களான சிது, ஸ்ரேயா ஆஞ்சன், சாய் பிரமோதிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இந்த ஜிம்மின் நிறுவனர் பரத் ராஜ்,  ‘சீயான்’ விக்ரம், ஆர்யா, ஜெயம் ரவி, சரத்குமார்  போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்களின் பிரத்யேக ட்ரெய்னர் என்பதும், நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பின் போது சிலகாட்சிகளுக்காக அவருக்கு பரத் ராஜ் பிரத்யேகமாக பயிற்சி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த உடற்பற்சிகூடத்தில்  தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் நபர்களுக்கு ஏற்றவாறு  பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அதிவேக  இன்டர்நெட் வசதியுடன் கூடிய தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் ஐஸ்பாத், ஸ்டீம்பத் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இந்த ஜிம்ல் இடம்பெற்றுள்ளன.இதனிடையே ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோவின் உட்கட்டமைப்பை துபாயில்  பல ஆண்டுகளாக இன்டீரியர் டிசைனிங் நிபுணராக பணியாற்றி மற்றும் சென்னையில்  உள்ள நியாம் ஸ்டுடியோவின் உரிமையாளருமான நிவேதிதா மோகனின் வழிகாட்டலுடன் பிரம்மாண்டமான பொருட்செலவில் சர்வதேச தரத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இங்கு பயிற்சிக்காக பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து உபகரணங்களும் ஸ்பெயின் நாட்டிலிருந்து வெல்கேர்  நிறுவ.னத்தின் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட உலகத்தரம் வாய்ந்த உபகரணங்கள் ஆகும்

இந்த ஜிம்மில்  பிரத்யேக உடற்பயிற்சியுடன், உங்கள் தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சியும்  வழங்கப்படுகிறது. உங்களது விருப்பத்திற்குரிய பொலிவான தோற்றத்தை பெறுவதற்கான உடற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

உடற்பயிற்சியுடன் உங்களது உடல்வாகுக்கு ஏற்ற அளவிலான உணவு பட்டியல், ஊட்டச்சத்து பட்டியல் ஆகியவற்றுக்கான ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

இதனுடன் ஆணழகனுக்கான பயிற்சி, ,பெண்களுக்கான பியூட்டி பேஜென்ட்,  திருமணமாக இருப்பவர்களுக்கான  மேக்ஓவர் பயிற்சி, ஆண்களுக்கான உடல் உறுதி பயிற்சி, தசை வலிமைக்கான பயிற்சி என பிரத்யேக பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

Previous Post

இயக்குநர் அசோக் தேஜா இயக்கத்தில், மது கிரியேஷன்ஸ் & சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் இணைந்து அதிக பட்ஜெட்டில் உருவாகும் பல மொழி திரைப்படமான ’ஒடேலா 2’ வில் நடிகை தமன்னா பாட்டியா இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு இன்று காசியில் பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது!

Next Post

ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் ஐரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆர்யன் இயக்கத்தில் இந்தியா, பாங்காக், இலங்கை மற்றும் நேபாளத்தில் உருவாகும் பான்-இந்தியா சாகச திரில்லர் திரைப்படம் ‘சத்தியமங்கலா’

Next Post

ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் ஐரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆர்யன் இயக்கத்தில் இந்தியா, பாங்காக், இலங்கை மற்றும் நேபாளத்தில் உருவாகும் பான்-இந்தியா சாகச திரில்லர் திரைப்படம் 'சத்தியமங்கலா'

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

    0 shares
    Share 0 Tweet 0
  • இரவின் விழிகள் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.