• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

நாங்கள் – விமர்சனம்

by Tamil2daynews
April 16, 2025
in விமர்சனம்
0
நாங்கள் – விமர்சனம்
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நாங்கள் – விமர்சனம் 

 

நாங்கள் திரைப்படத்தினை, ‘கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில், ஜிவிஎஸ் ராஜு தயாரித்துள்ளார். இயக்குனர் அவினாஷ் பிரகாஷ் எழுதி இயக்கியிருப்பதோடு, ஒளிப்பதிவினையும் மேற்கொண்டுள்ளார். இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளது. வேத் ஷங்கர் சுகவனம் இசையமைத்துள்ளார்.

ஊட்டியில் தனியார் பள்ளி நடத்தி வருபவரான அப்துல் ரபே, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார். தனது மூன்று ஆண் குழந்தைகளையும் மிகவும் கண்டிப்பாக வளர்க்கிறார். சிறிய தவறு நடந்தாலும் கடுமையான தண்டனைகளை கொடுக்கிறார். தந்தையின் மிரட்டலுக்கு பயந்து வேலையாட்கள் போல நடந்து கொள்ளும் குழந்தைகள், ஒருகட்டத்தில் வெகுண்டு எழுகிறார்கள். கேரளாவில் உள்ள தாய் பிரார்த்தனாவிடம் செல்கிறார்கள்.

ஆனால் தாயின் கஷ்டத்தை உணர்ந்து மீண்டும் தந்தையிடம் திரும்புகிறார்கள். மகன்களின் எதிர்காலத்துக்காக சில முடிவுகளை தைரியமாக அப்துல் ரபே எடுக்கும்போது பிரார்த்தனா வந்து சேருகிறார். அப்துல் ரபே தனது மனைவியை ஏற்றுக்கொண்டாரா? குழந்தைகளுக்காக அவர் எடுக்கும் முடிவுகள் என்ன? என்பதே மீதி கதை.

கண்டிப்பான தந்தையாக படம் முழுக்க அராஜகமான நடிப்பை வழங்கியுள்ளார், அப்துல் ரபே. குழந்தைகளை அடிக்கும் காட்சிகளில் அவரது சைக்கோதனமான நடிப்பு குரூரம். அழுகையும், ஏமாற்றமுமாக பிரார்த்தனா இயல்பான நடிப்பால் கவருகிறார். அப்துல் ரபேவின் மகன்களாக மிதுன், ரித்திக், நிதின் ஆகியோரின் அப்பாவித்தனமான நடிப்பு ஆச்சரியம் தருகிறது. அப்பாவிடம் அடிவாங்கி வந்த அவர்கள், ஒருகட்டத்தில் திமிறி எழுவது திருப்பம். சோகமான காட்சிகளை மட்டும் கருப்பு-வெள்ளையில் காட்டி அவினாஷ் பிரகாஷ் ஒளிப்பதிவில் புதுமை செய்துள்ளார். வேத் சங்கரின் இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது.

எதார்த்தமான நடிப்பு படத்துக்கு பலம். நாடகத்தனமான காட்சிகள் பலவீனம். மனைவியை பிரிந்து வாழும் ஒரு கண்டிப்பான தந்தையிடம் வளரும் குழந்தைகள் வாழ்க்கையை எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள்? என்பதை உணர்ச்சிகளின் அடிப்படையில் திரைக்கதையாக வடிவமைத்து கவனிக்க வைத்துள்ளார், இயக்குனர் அவினாஷ் பிரகாஷ்.

மொத்தத்தில் இந்த நாங்கள் படம் குழந்தைகளின் எதிர்காலத்தை கூர்நோக்கும் படம்
Previous Post

இந்திய சினிமாவின் மைல்கல், மூன்றாவது ஆண்டை நிறைவு செய்த கேஜிஎஃப் சேப்டர் 2 !!

Next Post

’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்!

Next Post

’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்!

Popular News

  • பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ படத்தை – Sun NXT-இல், டிசம்பர் 19 முதல் கண்டுகளியுங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் தனுஷ் வெளியிட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அவதார்’ திரைப்படத்திற்கு இந்தியாவின் ஆன்மீகத்துடன் வலுவான தொடர்பு இருக்கிறது என்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • Draft by GKB புரொடக்ஷன்ஸ் முதல் நாள் படப்பிடிப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் கிளாப் அடித்து துவங்கி வைத்தார் #GRK19

    0 shares
    Share 0 Tweet 0
  • மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ( Million Dollar Studios )- வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்கும் அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு பறை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

December 15, 2025

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ( Million Dollar Studios )- வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்கும் அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

December 15, 2025

மகாசேனா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

December 15, 2025

நடிகர் சாந்தனு பாக்யராஜின் ’மெஜந்தா’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ளது!

December 15, 2025

Draft by GKB புரொடக்ஷன்ஸ் முதல் நாள் படப்பிடிப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் கிளாப் அடித்து துவங்கி வைத்தார் #GRK19

December 15, 2025

நடிகர் தனுஷ் வெளியிட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்

December 15, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.