ஆனால் அதை விட்டு காதலில் அரசியலையும், அரசியலில் காதலையும் சொல்லி புதுமைப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பா. இரஞ்சித்.
சென்னை: நாடகக் காதல், 200 ரூபாய் டிசர்ட் போட்டுட்டு போனால் பொண்ணுங்க லவ் பண்ணிடுவாங்களான்னு தொடங்குகிற இடத்தில் இருந்து காதல் அரசியலை கச்சிதமாக பேசியுள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித்.
துஷாரா விஜயனின் ரெனே கதாபாத்திரம் இவ்ளோ போல்டாக எழுதப்பட்டு இருப்பது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது.

சினிமாவில் சாதிக்க நினைக்கும் கலையரசன் பாண்டிச்சேரியில் ஒரு கூத்துப் பட்டறைக்கு செல்கிறார். அங்கே காதல் பிரேக்கப் செய்த துஷாரா விஜயன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் இணைந்து ஒரு காதல் டிராமாவை போட திட்டமிடுகின்றனர். அவர்கள் எடுத்துக் கொள்ள நினைக்கும் டாப்பிக்கை வைத்தே காதல் என்கிற அற்புத உணர்வை வைத்து சமூகம் செய்யும் அரசியலை இயக்குநர் பா. ரஞ்சித் பேசியிருப்பது தான் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் கதை.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, சார்பட்டா பரம்பரை என பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான பல படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் கலையரசன் இந்த படத்தில் பொது ஜனமாக இருந்து கேட்கும் கேள்விகளும் அதற்கு கிடைக்கும் விடைகளும் ரசிக்க வைக்கிறது. எதிர்ப்பு அரசியல் மற்றும் ஒதுக்கும் அரசியல் சரியானது இல்லை என்றும் சமநிலையை அதை உணராதவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என பா. ரஞ்சித் பேசியுள்ள தத்துவ அரசியல் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

அதே சமயத்தில் கொஞ்சம் பலவீனமும் படத்தில் உண்டு.
ஓவர் பிரச்சார நெடியாக படம் முதல் பாதியை போல இரண்டாம் பாதியிலும் பயணிப்பது ரசிகர்களை தியேட்டரில் சீட்டை விட்டு எழுந்து செல்ல வைக்கிறது. டென்மாவின் இசை இன்னமும் படத்திற்கு கூடுதல் வலுவை சேர்த்திருக்கலாமோ என்கிற உணர்வை தூண்டுகிறது. படத்தின் நீளம் மற்றும் காட்சிகளாக நகராமல் வசனத்திலேயே பல விஷயத்தை நகர்த்துவதால் இந்த நட்சத்திரம் சற்று மெதுவாகவே நகர்கிறது!