• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ஒரு நடிகனாக ‘லெகஸி’ என்னை குஷிப்படுத்தியது”- நடிகர் மாதவன்!

by Tamil2daynews
October 15, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“ஒரு நடிகனாக ‘லெகஸி’ என்னை குஷிப்படுத்தியது”- நடிகர் மாதவன்!

 

வலுவான குற்றப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த வயதான ஒரு பெரியவர், தனது வலிமைமிக்க சாம்ராஜ்யத்தை தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையில் இருந்து பாதுகாக்க ஒரு வாரிசை நியமிக்கப் போராடுகிறார். அவர் குடும்பத்தையும், தனது சாம்ராஜ்யத்தையும், மிக முக்கியமாக தனது பாரம்பரியத்தையும் காப்பாற்ற போராடுகிறார். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல்ஸாக குடும்ப கேங்ஸ்டர் மற்றும் வாரிசுரிமையை மையமாகக் கொண்டு நகரும் தமிழ் சீரிஸ் ‘லெகஸி’. ஆர். மாதவன், நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தத் தொடரை சாருகேஷ் சேகர் இயக்கி இருக்கிறார்.

இது குறித்து இயக்குநர் சாருகேஷ் சேகர் பகிர்ந்து கொண்டதாவது, “‘லெகஸி’ எனக்கு மிகவும் பர்சனல். நான் நினைத்ததை கொண்டு வர படைப்பு சுதந்திரம் கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனத்திற்கு நன்றி. மனித உறவுகளின் சிக்கல் மற்றும் உணர்ச்சிகள் குறித்தான கதை எப்போதும் எனக்கு ஆர்வமூட்டும். அதன் அடிப்படையில், கேங்ஸ்டர் உலகின் பின்னணியில் இதை எழுதுவது அதை இன்னும் சுலபமாக இருந்தது. இதற்கு எனது திறமையான குழுவும் முழு ஒத்துழைப்பு கொடுத்தது. இந்தக் கதையை பார்வையாளர்கள் பார்த்த பின்பு அவர்களின் கருத்தையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.
நடிகர் மாதவன் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு கதை கேட்கும்போது உங்களுக்குள் இருக்கும் நடிகரை அந்தக் கதை சந்தோஷப்படுத்தும்போது நிச்சயம் அதில் நடிக்க ஒப்புக்கொள்வார்கள். அப்படித்தான், நான் ‘லெகஸி’ சீரிஸிலும் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்திய ஓடிடி தளத்தில் இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு சிறப்பான கதை மற்றும் திருப்பத்துடன் இது உருவாகி இருக்கிறது. இயக்குநர் சாருகேஷ் சேகர், ஸ்டோன் பென்ச் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் நெட்ஃபிலிக்ஸில் இந்தத் தொடர் பார்த்து ரசிக்க ஆர்வமாக இருக்கிறோம்” என்றார்.

நடிகை நிமிஷா சஜயன், “நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்னுடைய முதல் சீரிஸ் ‘லெகஸி’ என்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். எமோஷன், த்ரில் ஆகியவை கொண்ட இந்தக் கதையில் அற்புதமான குழுவினர் பணியாற்றியுள்ளனர். இரண்டாவது முறையாக ஸ்டோன் பென்ச் நிறுவனத்துடன் பணியாற்றி இருக்கிறேன். எங்கள் இயக்குநர் சாருகேஷ் மற்றும் அவரது திறமையான குழுவினர் பார்வையாளர்கள் விரும்பும்படியான அற்புதமான கதையை கொடுத்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை”.

நடிகர்கள்: ஆர். மாதவன், நிமிஷா சஜயன், கெளதம் கார்த்திக், குல்ஷன் தேவையா, அபிஷேக் பானர்ஜி

இயக்குநர்: சாருகேஷ் சேகர்,தயாரிப்பாளர்: கல்யாண் ஷங்கர்,தயாரிப்பு நிறுவனம்: ஸ்டோன் பென்ச் பிரைவேட் லிமிடெட்.

Previous Post

“எதிரெதிர் துருவங்களை இணைக்கும் #Love”- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Next Post

கேம் ஆப் லோன் – விமர்சனம்

Next Post

கேம் ஆப் லோன் - விமர்சனம்

Popular News

  • கேம் ஆப் லோன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் ‘ஸ்டீபன்’ உண்மைக்கு நெருக்கமான கதை!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’டியூட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எதிரெதிர் துருவங்களை இணைக்கும் #Love”- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஶ்ரீராம் கார்த்திக் நடித்துள்ள மெஸன்ஜர் படத்தின் டிரெய்லர் வெளியீடு

October 16, 2025

‘டீசல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

October 16, 2025

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜின் “சம்பராலா ஏடிகட்டு (Sambarala Yetigattu) (SYG)” படத்தின் ஒரு புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், “அசுர ஆகமனா ” (Asura Aagamana) சிறு முன்னோட்டம் !

October 16, 2025

“‘மேட் இன் கொரியா’ கதைக்கும் என் கதாபாத்திரத்திற்கும் தனிப்பட்ட தொடர்பு உண்டு”- நடிகை பிரியங்கா மோகன்!

October 16, 2025

கேம் ஆப் லோன் – விமர்சனம்

October 15, 2025

“ஒரு நடிகனாக ‘லெகஸி’ என்னை குஷிப்படுத்தியது”- நடிகர் மாதவன்!

October 15, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.