• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“எதிரெதிர் துருவங்களை இணைக்கும் #Love”- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

by Tamil2daynews
October 15, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“எதிரெதிர் துருவங்களை இணைக்கும் #Love”- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

 

திறமையான இளம் ஸ்டார்ட்டப் நிறுவனரான தாராவின் பயணம் மென்மையான அதேசமயம் துணிச்சலான முதலீட்டாளரான மேத்யூவுடன் இணையும்போது இன்னும் வலுவடைகிறது. நம்பிக்கை அடிப்படையிலான டேட்டிங் செயலியை தாரா ஆதரிக்கும் அதே வேளையில், கெமிஸ்ட்ரி அடிப்படையிலான ஒரு டேட்டிங் செயலியை மேத்யூ ஆதரிக்கிறார். இந்த விவாதத்தை தீர்த்து வைக்க அவர்கள் ஒருவருக்கொருவர் சவால் விடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தமிழ் சீரிஸாக பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கிறது #Love.

இதுகுறித்து இயக்குநர் பாலாஜி மோகன் பகிர்ந்து கொண்டதாவது, “எதிரெதிர் துருவம் ஈர்க்கும் என்பது காலங்காலமாக காதலின் எழுதப்படாத விதி. ஆனால், இந்தக் காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் டேட்டிங் செயலிகளில் அது எப்படி மாறியிருக்கிறது என்பதை புதிய திருப்பத்துடன் சொல்லி இருக்கிறோம். இன்றைய டேட்டிங் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்தக் கதை, காதல் பற்றிய காலத்தால் அழியாத கேள்விகளை ஆராய்கிறது. நெட்ஃபிலிக்ஸ் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் மே6 என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றியது இன்றைய பார்வையாளர்களுக்கு இந்த அழகான கதையை கொண்டு சேர்ப்பதற்கான சுதந்திரத்தைக் கொடுத்தது. கணிக்க முடியாத காதலை ஆழமான மனித உணர்வுகளுடன் பார்வையாளர்களுடன் சேர்ந்து கொண்டாட காத்திருக்கிறோம்” என்றார். எதிரெதிர் துருவங்களை இணைக்கும் #Love"- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி! - Cinemapluz

நடிகர் அர்ஜூன் தாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது. ஒரு டேட்டிங் செயலியைச் சுற்றி உருவாக்கப்பட்ட ஐடி ஸ்டார்ட்டப்பின் துடிப்பான பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தக் கதை, டிஜிட்டல் யுகத்தில் உண்மையான இணைப்பைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்களை பேசுகிறது. என் கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இந்தக் கதையையும் என் கதாபாத்திரத்தையும் நிச்சயம் பார்வையாளர்கள் தொடர்புபடுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். நெட்ஃபிலிக்ஸ், சௌந்தர்யா ரஜினிகாந்த், பாலாஜி மோகன் மற்றும் முழு குழுவுடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்தது” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, “ஸ்வைப்ஸ், மேட்ச் மற்றும் உடனடி செய்திகளின் யுகத்தில், #Love இரண்டு எதிரெதிர்கள் துருவத்தை சேர்ந்தவர்களை சந்திக்க வைக்கிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் எவ்வாறு தடுமாறுகின்றனர் என்பதையும், வேகமான உலகில் எதிர்பாராத பிணைப்புகள் எவ்வாறு உருவாகலாம் என்பதையும் ஆராய்கிறது. இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் அவரது இயக்குநர் குழு, ஒளிப்பதிவாளர் ஹரிஷ், சக நடிகர்கள் அர்ஜுன் தாஸ், அர்ஜுன் சிதம்பரம், ஹரிணி, கிரண், ஸ்டைலிஸ்ட் பல்லவி ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர்” என்றார்.

நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி

இயக்குநர்: பாலாஜி மோகன்,
தயாரிப்பாளர்: சௌந்தர்யா ரஜினிகாந்த்,
தயாரிப்பு: மே6 எண்டர்டெயின்மெண்ட்
Previous Post

’டியூட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

Next Post

“ஒரு நடிகனாக ‘லெகஸி’ என்னை குஷிப்படுத்தியது”- நடிகர் மாதவன்!

Next Post

"ஒரு நடிகனாக 'லெகஸி' என்னை குஷிப்படுத்தியது"- நடிகர் மாதவன்!

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.