• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆகோள் மூன்றாம் பாகம் 2026ஆம் ஆண்டு வெளியாகும்

by Tamil2daynews
December 10, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆகோள் மூன்றாம் பாகம் 2026ஆம் ஆண்டு வெளியாகும்

ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதி 2022ஆம் ஆண்டு வெளி வந்த நாவல் ஆகோள். பொதுமக்களைக் குற்றவாளிகளாக நடத்தும் போக்கு இன்றளவும் உலக அரசியலில் இருக்கிறது என்ற கருத்தை ஒரு டைம் டிரேவல் கதைவழி சொல்லிய புத்தகம். ஆகோள் ஆங்கிலத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்றது. இதனிடையே ஆகோள் நாவலின் இரண்டாம் பாகமான மாக்கியவெல்லி காப்பியம் இந்தாண்டு வெளியானது. எதிர்காலத்தில் அறிவியலின் துணை கொண்டு அதிகார மையங்கள் மக்களின் சிந்தனைகளை எப்படியெல்லாம் அடிமைப்படுத்தக்கூடும் என்பதை மாக்கியவெல்லி காப்பியம் பேசியிருக்கிறது. குற்றப்பரம்பரை சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மதுரை எட்டு நாடுகளின் வரலாறு இதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகோள் மற்றும் மாக்கியவெல்லி காப்பியம் நூல்கள் பாவை கல்வி நிறுவனங்களின் சிறந்த அறிவியல் புதினம் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு கபிலன்வைரமுத்துவுக்கு தமிழ் இலக்கியச் செம்மல் விருது வழங்கப்பட்டது.

தற்போது கபிலன்வைரமுத்து தன் இன்ஸ்டாகிராமில் ஆகோள் மூன்றாம் பாகத்திற்கான ஆய்வுப்பணிகள் தொடங்கியிருப்பதாக பதிவிட்டிருக்கிறார். இந்த நூல் 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என்பதையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழில் ஒரு நாவல் மூன்று பாகங்களாக எழுதப்படுவது மிக அரிது. கபிலன்வைரமுத்துவின் முந்தைய நாவலான மெய்நிகரி கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கவண் என்ற திரைப்படமாக வெளிவந்தது. ஆகோள் நாவல்களும் திரைப்படங்களாகுமா ? குற்றப்பரம்பரை கதைகள் திரைக்கு வருவது கபிலன்வைரமுத்துவின் ஆகோள் மூலம் நிறைவேறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Previous Post

சீயான் விக்ரம் நடிக்கும் ‘ வீர தீர சூரன் ‘ படத்தின் டீசர் வெளியீடு

Next Post

நாயகன் கௌதமனுடன் மோதும் ஆறு எதிர் நாயகர்கள்.

Next Post

நாயகன் கௌதமனுடன் மோதும் ஆறு எதிர் நாயகர்கள்.

Popular News

  • மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

April 12, 2026

தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

April 12, 2026

நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

April 12, 2026

TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

April 12, 2026

Lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – விமர்சனம்

April 12, 2026

“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்

April 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.