மக்கள் விரும்பும் பாடகி ராஜலட்சுமி செந்தில் “லைசென்ஸ்” திரைப்படத்தில் நடிக்கிறார்.
தமிழகம் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கும் மக்கள் இசை பாடகியான ராஜலட்சுமி செந்தில் இந்த லைசென்ஸ் படம் மூலம் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
பட்டி முதல் சிட்டி வரை பாப்புலராக வலம்வரும் ராஜலட்சுமி செந்தில் திரைப்படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக” என்ன மச்சான்”மற்றும் “ஊ…சொல்றியா” ஆகிய பாடல்களை சொல்லலாம்.


பெண்களின் மேன்மையை எடுத்துரைக்கும் இப்படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கூடுதல் தகவலாக உள்ளது.
விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது .